190
இளங்குமரனார் தமிழ்வளம்
―
5
கிள்ளி தந்தையை வெறுத்து, நாட்டை விட்டு வெளி யேறியது படிப்படியாக மக்களுக்குத் தெரியவந்தது. மூலை முடுக்குகளிலும் அரண்மனைச் செய்திகள் அடிபட ஆரம் பித்தன. அதற்கு முன்னெல்லாம் அரசனைப் பற்றி எதுவும் பேச முடியாத ஊமையராகக் கிடந்தவர்கள் கூட ‘வாய் திறக்க ஆரம்பித்து விட்டனர்.
மன்னவன் வெளிநாட்டுப் பகைவரை ஒழிப்பதற்காகத் திட்டமிட்ட செயலாலே, உள்நாட்டுப் பகை உருவாகும் படி u யான நிலைமை இருப்பதை உணராமல் செயலாற்றிக் கொண் டிருந்தான். கிள்ளியின் மீது மக்கள் அன்பு மறைமுகமாக வளர்ந்து கொண்டு வந்தது.
கிள்ளி, வீரன் அல்லவா! வைர நெஞ்சம் இருக்காதா? சொன்னபடியே நாட்டை விட்டு வெளியேறினான். எவர் துணையையும் அவன் நாடவில்லை. எந்தவொரு பொருளையும் எடுத்துக் கொள்ளவில்லை. எதுவும் அற்ற ஓர் ஏழை மகன் போலவே உண்ட சோற்றோடு, உடுத்திய உடையொடும் வெளியேறினான்.
உள்ளத்தில் உரம் இருந்ததே ஒழியக் கிள்ளிக்கு மிகுதி யான நடைப் பழக்கமோ, பசித்துக் கிடந்த பழக்கமோ இல்லை. வேளையறிந்து வகை வகையான உணவுகளைப் படைத்துக் கொண்டு காத்துக் கிடப்போர் இருக்க தேரும், குதிரையும், யானையும் இருக்க அவன் எப்படிப் பசித்துயருக்கும், நடைத் துயருக்கும் ஆளாகியிருப்பான்?
கால்கள் நோவெடுத்தன; கொப்புளங்கள்; கிளம்பின; இரத்தம் வடிந்தது; பசி கண்ணொளியை மங்கச் செய்தது; காதடைத்துக் கொண்டு வந்தது. நாக்கு வறண்டு கீழே வீழ்த்தும் அளவுக்குப் போய்விட்டது. ஆமூர் என்னும் ஊரை அடைந் தான். ஆமூர் வேறொரு வேந்தனுக்கு உரியதாக இருந்தது. தன் தந்தையின் ஆட்சிக்கு உட்பட்ட ஊரில்லை அல்லவா? அதனால் அங்கே தங்கிவிட நினைத்தான்.
ஒரு திண்ணையிலே களைப்போடு உட்கார்ந்திருந்தான். அங்கு யாரும் காணப்படவில்லை. அது ஒரு குடிசை வீடு! உள்ளும் மக்கள் நடமாட்டம் தெரியவில்லை. அக்குடிசை வீட்டை ஒட்டி ஒரு மாடி வீடு இருந்தது. அங்கிருந்து கேட்டுக் காண்டிருந்த ஒலிகள் அது ஒரு செல்வர் வீடு என்பதைக் காட்டின.