புறநானூற்றுக் கதைகள்
191
கிள்ளி களைப்பு மிகுதியால் திண்ணையில் படுத்தான். படுத்த சிறிது நேரத்திற்குள் கண்ணயர்ந்து விட்டான். பசித் துயரும் நடைத்துயரும் மிகுந்த உறக்கத்திலே ஆழ்த்தி விட்டன! நெடுநேரம் கழித்துக் கிள்ளியைக் கிழவி ஒருத்தி எழுப்பினாள். ‘அவளே வீட்டுக்காரக் கிழவி' என்பதை அறிந்து கொண்டான். கிழவி துணை யாரும் இல்லாதவள். அவள் மிகுந்த அன்புடன் கிள்ளியை வினவினாள். கிள்ளியும் ஏதேதோ சொன்னான். ஆனால் அரசன் மகன் என்பதை மட்டும் சொல்லிக் கொள்ளவில்லை. “தன் தந்தையுடன் தகராறு” என்னும் அளவில் பேசினான்,
66
வ வன் வளமான குடும்பத்தைச் சேர்ந்தவனாகத் தான் இருக்க வேண்டும்; ஏதோ இப்படி வந்து விட்டான்.” என்று எண்ணிய கிழவி அவனை வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள். நீரும் சோறுமாகப் பானையில் இருந்ததை ஒரு ஏனத்தில் விட்டு வைத்தாள். இதற்குமுன் அரண்மனையிலே கூடக் காண முடி யாத சுவையைக் கிழவி தந்த கஞ்சியிலே கண்டான் கிள்ளி!
கிழவி சொன்னாள்; “பையா! நீ உன் வீட்டுக்குப் போகு மட்டும் வேறெங்கும் போகவேண்டாம். இங்கேயே இருக்கலாம். இங்கு வேறு யாரும் யாரும் இல்லை. ய இல்லை. எனக்குத் துணையாகவும் இருக்கும். உனக்கும் நல்லது. நீ வேறு எங்கும் போய்த்தான் என்ன செய்வாய்” என்றாள். கிழவியின் அன்புரை கிள்ளியின் நெஞ் சத்தைத் தொட்டது. அவள் உரைப்படி நடப்பதற்கு ஒப்பினான்.
கிழவியின் உள்ளம் விரிந்திருந்தது. ஆனால் அவளுக்குச் செல்வம் சுருங்கி இருந்தது. அவள் செல்வ வாய்ப்பைக் குடி யிருந்த குடிசை ஒன்றே காட்டுவதற்குப் போதுமானதாக இருந்தது. மழை பெய்தால் போதும், குடிசை எல்லாம் ஈரமாகிவிடும். கண்ணாடி பதித்த கூரையோ என்று நினைக்குமாறு வெயில் பொழுது காட்சியளிக்கும். தளமும் குண்டு குழியுமாகவே இருந்தது.
கிள்ளிக்கு இவையெல்லாம் புதிய அனுபவந்தான் இருப் பினும் கிழவியின் உள்ளார்ந்த அன்பு "இன்ப நிலைய”மாக எண்ணுமாறு செய்தது. தினை, வரகு முதலான புல்லரிசிகளைப் போட்டு ஆக்கிய கஞ்சி உணவையே உண்டு இன்பமாக வாழ்ந்து வந்தான்.
கிழவியின் குடிசைக்குப் பக்கத்தில் மாடம் ஓங்கிய வீடு ஒன்று இருந்தது அல்லவா! அவ் வீட்டில் வணிகன் ஒருவன் இருந்தான். அவன் கடல் கடந்து சென்று. அயல்நாடுகளுடன்