உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூற்றுக் கதைகள்

195

தானே! பார்த்து வருகிறேன். நீங்கள் என்னைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம்" என்று சொல்லிக் கொண்டே சிங்கம் போல் செருக்கி நடை போட்டான்.

று

மல்லனோடு மல்லனாக நடக்கும் கிள்ளியைக் கண்ட நக்கண்ணை உள்ளம் பட படத்து “என்னாகுமோ?" என்று ஏங்கினாள். அவர்களைத் தொடுத்துச் செல்ல வேண்டும் போல் இருந்தது. ஆனால் தந்தை என்ன நினைப்பார்? தாய் என்ன சொல்வாள்? ஊர் என்ன கூறும்? நாணம் விட்டு வைக்கிறதா? அடக்கிக் கொண்டு எடுத்து வைத்த காலைத் தடுத்து நிறுத்திக் கொண்டாள். கிள்ளியைத் தொடர்ந்து போனவர்களில் கிழவி தான் முதல் ஆள்! தாயன்புக்கு நிகருண்டா?

மக்கள் கூட்டம் திரண்டு விட்டது,. போருக்காகக் கூடிய அவை அல்லவா அது. அதனால் அது போரவையாயிற்று. போரவையின் இடையே ஓர் எல்லைக் கோடு போட்டு, அதற்குள் மற்போர் வீரர்கள் புகுந்தனர்.

மல்லன் கால்களையும், கைகளையும் ஆட்டிக் கொண்டு எக்களிப்போடு நின்றான். கிள்ளி தன் பரம்பரைக்குரிய ஆத்திப் பூவைத் தலையிலே சூடிக்கொண்டான். குலப்பூவைச் சூடிக் கொண்டதும் மல்லனாகத் தெரியவில்லை! கோளரி போல் தாவினான்.

முரசமும் முரசமும் முட்டுவது போன்று தோள்கள் மோதின; துதிக்கையும் துதிக்கையும் வளைத்துப் பற்றுவது போலக் கைகள் பற்றின; பாம்புகள் சுற்றி வளைப்பது போல் கால்கள் பின்னின; பாறைக் கல்லின் மேல் இரும்புக் குண்டு வீழ்ந்து தாக்குவது போல மார்புகளிலே தலைகள் மோதின; உலக்கை தாக்குவது போல கைகள் தாக்கின; கோடரி போல் கழுத்தின் அடிப்பகுதிகளைக் கைகள் வெட்டின; இருந்தவர் அனைவரும் இரங்கினர். 'என்னாகுமோ' என்று ஏங்கினர்”.

ஊரிலே எவரும் இல்லை என்று கூறும் அளவுக்கு மக்கள் திரண்டு போயிருந்தனர். கிள்ளியே வெல்வான் என்றனர் சிலர்; கிள்ளி தோற்றாலும் தோற்கலாம் என்றனர் சிலர். வெற்றி தோல்விகளை எவர் கண்டார் என்றனர் சிலர்.

“கிள்ளிக்கு வெற்றி கிடைக்கக் கூடாதா?” என்று துடி யாகத் துடித்தாள் நக்கண்ணை. மற்போரைக் காண வேண்டும் என்னும் ஆவல் உந்தி எழுந்தது. ஓடினாள்; நாணம் ஓடவிடாமல் தடுத்தது. வீட்டின் பக்கத்தே நின்ற பனைமரம் வரைக்கும்