உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

இளங்குமரனார் தமிழ்வளம்

5

ஓடினாள். அதன் அடியைப் பற்றிக் கொண்டு, ஒரு பக்கம் மறைந்து நின்று மற்போரைப் பார்த்தாள்.

நொடி நொடி தோறும் வெற்றி தோல்விகள் மாறி மாறி வந்து சென்றன. “கிள்ளி வென்றான்' என்று மகிழ்வாள். ஒரு நொடியில் மல்லன் கிள்ளியை வாரியடித்து அவன் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு தாக்குவான். மறுநொடியில் அவனைக் கீழே தள்ளி விட்டு மேலே ஏறிக் கொண்டு சிங்கம் போல் பிய்த்து எடுப்பான் கிள்ளி, கூட்டம் ஆரவார ஒலி எழுப்பும்! இப்படி மாறி மாறி நேரம் போய்க் கொண்டிருந்தது. நக்கண்ணை இமை கொட்டாது பார்த்துக் கொண்டே இருந்தாள்.

L

அம்மா! கிள்ளி மல்லனைக் கீழே உருட்டித் தள்ளி விட் ன்! மல்லன் மார்பின் மீது ஒரு காலை ஊன்றி மடக்கினான். மற்றொரு காலால் அவன் எதிர்ப்புகளைத் தடுத்துக் கொண்டு முதுகை நெருக்கினான். மூங்கில் மூட்டை நெரிக்கும் யானை போன்று மல்லனது தலையையும் காலையும், வளைத்து நெரித் தான். கைகளால் மாறி மாறிக் குத்தினான். குத்துவதிலே எவ்வளவு விரைவு! குத்திக் குத்தி மல்லனைக் கொன்றே போட்டான். "வெற்றி வெற்றி" என்று ஓங்கிச் சத்தமிட்டாள் நக் கண்ணை. “வெற்றி வெற்றி என்று முழங்கியது அவை. ஒலி விண்ணைத் தொடும் போல் இருந்தது. கிள்ளியின் வெற்றி ஆமூர் வெற்றியாகியது.

66

எப்படியடா!அந்த மல்லனைக் கொன்றாய்? என்று கண்ணீர் வடிய நின்று கேட்டாள் கிழவி. கிள்ளியின் தோள் களைத் தடவித் தந்தாள். அந்த அன்புப் பிழம்பின் கை பட்ட வுடன் வலிபோன போக்குத் தெரியவில்லை. மாடியிலே நின்று புன் முறுவல் பூத்தது ஒரு பூங்கொடி. நக்கண்ணையாகத்தானே இருக்கவேண்டும் அப் பூங்கொடி!

சாத் தந்தையார் என்பவர் ஒரு புலவர். அவர் கிள்ளியும் மல்லனும் பொருது நின்ற போரவைக்கு வந்திருந்தார். போர் நிகழ்ச்சியும் வெற்றியும் கிள்ளியைப் பார்க்காமல் அவரைப் போக விடவில்லை. கிள்ளி, தித்தன் மகன் என்பதையும், தந்தை யோடு பகைத்து ஆமூரில் வாழுகின்றான் என்பதையும் அவர் அறிவார்.

ஆனால், அவன் மல்லனை வென்ற மல்லனாக நின்ற போதே, அவன் ஊக்கத்திலும், உடலழகிலும் ஈடுபட்டுத் தம்மை மறந்து நின்றார். அந்நிலை, கிள்ளியைக் கண்டு அன்புறத் தழுவிக்