உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

இளங்குமரனார் தமிழ்வளம்

5

வி

"நீ சோழன் மகனா? இந்தக் கிழவியை ஏமாற்றி விட்டாயே! பொல்லாதவன்” என்று புன்முறுவல் பூத்தாள்.

கூட்டத்தில் இருந்த நாய்கன் கிள்ளி “வேந்தன் மகன்' என்பதை அறிந்து வியப்படைந்தான். கிள்ளி மிக இளைஞனாக இருக்கும்போது, நாய்கன் பார்த்திருக்கிறான். ஆண்டுகள் பல கடந்துவிட்டன. கிள்ளியும் வளர்ச்சியில் பெருமாற்றம் அடைந்து விட்டான். இப்பொழுது அறிந்துகொண்டதும் தாழமுடியாத இன்பம் கொண்டான். அவ்வின்ப மிகுதியால் புலவருக்கும், கிள்ளிக்கும் ஊர்ப் பெரியோர்களுக்கும் சிறப்பான விருந்துக்கு ஏற்பாடு செய்தான். அதற்குப் பின் ஊரில் பல பல வீடுகளில் கிள்ளிக்கு விருந்து நடைபெற்றன. என்றாலும் அவனால் முதல் நாள் விருந்தை மட்டும் மறக்க முடியவில்லை. மறப்பானா?

மிக்க

வேலைக்காரரை யெல்லாம் தடுத்துவிட்டுப் பெருமை

விருந்தாளிக்கு வீட்டுக்காரரே சமைத்துப் போட வேண்டும். அதுதான் பெருமை" என்று கூறித் தானே முன் னின்று வேலை செய்தாள் நக்கண்ணை. அவள் பேச்சுக்கு எதிர்ப் பேச்சு அங்குக் கிடையாது! இப்படி நடந்த விருந்து கிள்ளியின் உள்ளத்தைக் கவர்ந்ததில் வியப்பு இல்லையே! “இப்படி விருந்து நாள்தோறும் கிடைக்கக்கூடாதா?” என்பது கிள்ளியின் ஆவ லாக இருந்தது! நக்கண்ணைக்கும் தான் என்ன, அவ்வெண்ணம் இல்லாமலா போய்விட்டது?

தித்தனது ஒற்றர்கள் எல்லா இடங்களிலும் இருந்தார்கள். அவர்களில் சிலர் ஆமூர் மல்லன் நிகழ்ச்சியைக் கூறினார்கள். சாத்தந்தையார் கூறியதையும் கூறினார்கள். அதற்கு மேலும் மைந்தனை வெறுத்துக் கொண்டிருக்க அவனுக்கு மனமில்லை.

நகரத்திலும் மக்களுக்குத் தன் மேல் வெறுப்புணர்ச்சி வளர்ந்துகொண்டிருப்பதையும், கிள்ளியின் மீது அன்பு வளர்ந்து கொண்டு இருப்பதையும் அறிந்தான். இச்சூழ்நிலையில் மக்கள் கிள்ளியைத் தூண்டிவிட்டுத் துணை நின்று நம்மைத் தாக்க முனைந்தாலும் முனையலாம். அது மிகவும் இழிவானது என்று கருதிப் பழைய நிகழ்ச்சிகளை யெல்லாம் மறந்து அழைப்ப தற்கு முடிவுகொண்டான்.

காலநிலையை நன்றாக அறிந்துகொண்ட படைத் தலைவனும் ஆமாம்' என்றான். கிள்ளியை அழைப்பதற்காக அரசன் அமைச்சரை அனுப்பி வைத்தான்.