உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூற்றுக் கதைகள்

199

அரசன் ஏவற்படி, அமைச்சர் ஆமூர் சென்று கிள்ளியைக் கண்டார். மன்னன் உரையைத் தெளிவாகச் சொன்னார். நாட்டின் நிலைமையையும் கூறினார். கிள்ளி முதலாவது ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும், அமைச்சர் உரையை மறுக்கவும் இயலவில்லை. உறையூருக்கு வர ஒப்புக் கொண்டான். ஆனால் நக்கண்ணையைப் பிரியவேண்டிய ஒன்றை நினைக்க, இடி வீழ்ந்து தாக்குவது போல் இருந்தது.

கிள்ளியை அழைத்துச் செல்வதற்கு அமைச்சர் தேருடன் வந்திருப்பதை அறிந்தாள். அவள் கண்கள் கவலையால் சிவந்து விட்டன. “கிள்ளியை மறக்கத்தான் வேண்டுமா?” என்று வருந்தினாள். துணிவுகொண்டு கிழவியின் வீட்டுக்கு வந்தாள்.

கிள்ளிக்கு அவளைக் கண்டவுடன் அடக்கிக் கொள்ள முடியாத அளவு கவலை பெருகியது. கண்ணீர்த் துளிகள் மார்பை நனைத்தன. "நக்கண்ணை! நான் உன்னை மறக்க மாட்டேன்; உயிரே பிரிந்தாலும் உன்னை மறக்க மாட்டேன். என் நெஞ்சத்தில் உன்னை அன்றி வேறு யாருக்கும் இடமில்லை. என் பெற்றோர்களின் ஒப்புதலுடன் விரைந்து இங்கு வருவேன். உன்னை மணந்துகொள்வேன்.”

“அரசர் என் கருத்துக்கு இணைந்து வராவிட்டால், மீண்டும் அரசரை வெறுத்து வெளியேறி உன்னை மணந்து கொண்டு வாழ்வேனே அன்றி, நாட்டை ஆண்டுகொண்டு அவர் விருப்பம் போல் இருக்க மாட்டேன். து உண்மை என்று விரைந்து பேசினான்.

நக்கண்ணையால் அங்கு நின்றுகொண்டிருக்க முடிய வில்லை. துணியால் வாயைப் பொத்திக்கொண்டு ஓடிப்போய்க் கட்டிலிலே வீழ்ந்துகொண்டாள். கிள்ளியின் நெஞ்சம் வெடித்து விடும்போல் இருந்தது. மார்பைப் பிடித்து அழுத்திக்கொண் டிருந்தான்.

66

கிழவியைத் தன்னுடன் வருமாறு கிள்ளி அழைத்தான். "நான் பிறந்த மண்ணைவிட்டு வரமாட்டேன்! அரசனாகப் போகிறவன் நீ. என்னை நினைக்க நேரம் எங்கே இருக்கும். நீ மறந்தாலும் நான் மறக்கமாட்டேன். போய் வா! உறையூருக்கு ஒருநாள் வரத்தான் போகின்றேன்” என்றாள்.

“பாட்டி” என்று தன் அன்பையெல்லாம் கூட்டிக் கத்தி னான். “வாழ்க" என்றாள் அவள். தேர் நகர்ந்தது. கிள்ளியின் கண்கள் நீரை வடித்துகொண்டே சென்றன. நக்கண்ணை அன்று முழுவதும் படுக்கையை விட்டு எழுந்திருக்கவே இல்லை.