200
―
இளங்குமரனார் தமிழ்வளம் 5
உறையூர் மக்கள் கிள்ளியை மகிழ்ச்சியாக வரவேற்றனர். அவர்கள் உள்ளன்பெல்லாம் வளிப்படுமாறு வரவேற் பிருந்தது. தித்தன் பழையவற்றை எல்லாம் மறந்துவிட்டு மைந்தனைத் தழுவிக்கொண்டு இன்புற்றான். இந்த மகிழ்ச்சிப் பொழுதிலேயே முடிசூட்டி விட வேண்டும் என்பது அவன் ஆசையாயிற்று. அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முனைந்தான். அதற்குள் திருமணம் பற்றிய பேச்சும் எழவேண்டியது ஆயிற்று.
தித்தன் எத்தனையோ மன்னர் மகளிரைக் கிள்ளிக்குத் தக்கவர்களைக் கொண்டு நினைவு படுத்தினான். அவன் எண்ண மெல்லாம் அரச மகளிரையே வட்டமிட்டுக் கொண்டு இருந்தது. அதுதானே வழக்கமுங் கூட!
கிள்ளியின் உள்ளம் நக்கண்ணை மீது நிலைத்து இருந்தது அல்லவா! அரசனிடமும் அரசியிடமும் மறைவின்றித் தன் கருத்தை எடுத்துரைத்தான் கிள்ளி. ஒரு வணிகன் மகள் என்ப தால் அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தனர். ஆனால் கிள்ளி உறுதிப்பாட்டுடன் இருந்தான்.
"நக்கண்ணையைத் திருமணம் செய்து கொள்வதற்குத் தடையாக அரசு இருக்குமானால் அவ்வரசு எனக்கு வேண்டாம். தாய் தந்தையர் தடையாக இருந்தால் அவர்களை விட்டு வெளி யேறுவேனே அன்றி அவர்கள் விருப்பத்திற்காக வேறு எவரை யும் மணமுடித்துக் கொள்ளப் போவது இல்லை. என் திரு மணத்தில் எனக்குத் தடையாக இருக்க எவரையும் அனுமதிக்க மாட்டேன்” என்று உறுதியாகக் கூறி விட்டான்.
மீண்டும் மைந்தனைப் பிரியத் தித்தன் விரும்பவில்லை. கிள்ளிக்கு மக்கள் ஆதரவும் பெருகி இருந்ததல்லவா! அதனால் அரசன் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டான்.
இங்கு இவ்வாறு இருக்க நக்கண்ணையோ கிள்ளியின் நினைவாகவே இருந்தாள். கிள்ளி தன் வாக்கினைக் காப்பாற்றத் தவறான் என்ற நினைவாலேயே வாழ்ந்து கொண்டிருந்தாள். இருந்தாலும் அவள் அளவுக்கு மிஞ்சி மெலிந்து போனாள். கையிலே கிடந்த வளையல்கள் கழன்று விழுமாறு மெலிந்து விட்டாள்.
தங்க நிறமான அவள் உடல் ஏக்கத்தினால் சாம்பல் பூத்து வெண்ணிறமாகி விட்டது. உண்பதிலோ, உடுப்பதிலோ, உறங்கு வதிலோ சிறிதும் எண்ணம் செலுத்தினாள் இல்லை. சிற்சில வேளைகளிலே தன் ன்னை மறந்து உறங்கினாலும் கூடக்