உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூற்றுக் கதைகள்

201

கிள்ளியைக் கண்டதாகக் கனவுகள் கண்டு துன்புற்றாள். கனவுகள் மெய்யாகுமோ அன்றிப் பொய்யாகத்தான் போய்விடுமோ

என்று வருந்தினாள்.

நாள்கள் மாதங்கள் ஆயின. அவள் என்ன செய்யமுடியும்? உறையூர்ப் பக்கத்தே நோக்கி நோக்கிக் கண்ணீரை வடித்துக் காண்டே இருந்தாள். இந்நிலைமையைப் பெற்றோர்கள் ருந்தாள்.இந்நிலை அறிந்து கொண்டார்கள். ஊரவர்களும் ஒவ்வொருவராய் எல்லோரும் அறிந்துகொண்டார்கள். இரண்டு மூன்று பேர்கள் சந்தித்த இடங்களிலெல்லாம் நக்கண்ணை கிள்ளி பற்றிய பேச்சாகவே இருந்தது. மறைந்து மறைந்து பேசித் திரிந்தனர்.

-

இயற்கையாகவே நொந்து போய் இருந்த நக்கண்ணையை இவ்வுரைகள் வேல் கொண்டு துளைப்பது போலாக இருந்தன. அழுது அழுது முகம் வீங்கினாள். ஒரே மகளின் நிலைமையை நினைத்துப் பெற்றோர் பெரும் பாடு பட்டனர். ஊர்ப் பழிக்கு ஒரு புறம் அஞ்சினர்! மகளின் நிலைக்காக மற்றொரு பக்கம் கலங்கினர். இருந்தாலும் ஊர்ப் பேச்சு ஊசி போல் தைத்து அவர்கள் உள்ளத்தைக் கல்லாக்கியது.

அதனால் “பெண் பிள்ளை ஊருக்குப் பயந்து நடக்க வேண்டும்” என்றும், நாணத்தைக் கைவிட்டுத் திரிவது இழிவு’ என்றும் கண்டித்து வீட்டை விட்டு வெளியேறாமல் தடுத்து நிறுத்தினர். உரிமையுடன் வாழ்ந்த நக்கண்ணைக்குத் தொல்லை யாக இருந்தது. கிள்ளியைப் பற்றி ஆறுதலுக்காகவாவது ஒரு செய்தியும் தெரியவில்லை.

ஒருநாள் தோழியுடன் வீட்டின் பின்புறக் கொல்லையிலே நின்று கொண்டிருந்தாள். அப்பொழுது ஒரு தேர் வந்து நின்றது. தேரில் வந்தவன் கிள்ளிதான். அவனைக் கண்டவுடனே, அதற்கு முன் பட்ட துன்பத்தையெல்லாம் மறந்து உள்ளம் பூரித்தாள். ஆனாலும் திருமணம் செய்து கொண்டால் அல்லவா நிலைத்த இன்பம். அதற்காகத் தோழியுடன் பேசிக்கொள்வது போலப் பேசினாள்.

"தோழி! தலைவன் வர வேண்டிய வழி தொலைவானது; துன்பமிக்கது; அவர் வராமல் இருப்பதையும் தாங்கிக் கொள்ள என்னால் முடிய வில்லை. இங்கே தாய் தரும் தொல்லையும், ஊரார் பேச்சும் நாள் தோறும் மீளாத் துயரமாக இருக்கின்றன. இனி யாது செய்வோம்?” என்றாள். கிள்ளிக்குச் சொல்வது போலச் சொல்லிவிட்டாள். கிள்ளி இதனை அறியமாட்டானா?