202
―
இளங்குமரனார் தமிழ்வளம் 5
"நக்கண்ணை! உன் துன்பத்தை விடுக, அரசர் நம் திரு மணத்திற்கு இசைவு தந்து விட்டார். விரைவில் பெண் கேட்டு வருவர். அதற்கு இசைய வேண்டுவது உன் பெற்றோர் கடமை. அவர்கள் மறுத்தாலும் நம் திருமணம் நடை பெறத்தான் போகின்றது. இருந்தாலும் முறையோடு ஏற்றுக்கொள்வது நலம் தரும்” என்றான்.
அவன் சொல் வறண்ட பயிருக்கு வான் தந்த மழை போல் இருந்தது. ஏக்கத்தின் இடையே இன்புற்றாள் அன்புக் கிழவியைத் தேடிப் பார்த்தான் கிள்ளி. அவளைக் காணவில்லை. தேர் திரும்பியது உறையூருக்கு.
அமைச்சரும், சில பெரியோர்களும் பெருங்கோழி நாய்கன் வீட்டுக்குப் பெண் கேட்டு வந்தனர். நாய்கன் அரசன் விருப்பத்தை மறுத்துரைக்க நினைக்கவில்லை. மகள் விருப் பத்தை முன்பே அறிந்து கொண்டும் இருந்தான் அல்லவா!
நல்லதோர் நாளிலே மன்னர்கள் சூழ, மக்கள் வாழ்த்த, புலவர்கள் போற்ற, கிள்ளிக்கும் நக்கண்ணைக்கும் இனிதே திருமணம் நிறைவேறியது. ஊரே திருவிழாக் கொண்டாடி மகிழ்ந்தது.
இரவிலே மணமக்கள் ஊர்வலம் வந்தனர்; உயரிய யானை மீது மணமக்கள் இருந்தனர். யானை முழக்கமிட்டுக் கொண்டு உலா வந்தது; அவ்வுலாப் பொழுதிலே சாத்தந்தையாரும் அங்கு இருந்தார்.
66
ல்
ஆரவாரம் கடல் ஓசையை வெல்லுகிறது; யானையின் பிளிறல் இடி மழையையும் அடக்குகிறது; இனிக் கிள்ளியைப் பகைத்தவர் பாடு வருந்தத் தக்கதே” என்று பாராட்டிப் பேசினார்.
"புல்லரிசி யுண்டும் மல்லனை வென்ற வல்லாளனே நெடிது வாழ்க!" என்னும் ஒரு வாழ்த்தொலி ஆரவாரத்தின் டை யே எழுந்தது. ஒலியெழுந்த பக்கம் திரும்பிப் பார்த்தனர். கிள்ளி யானையை விட்டுக் கீழே இறங்கினான். ஒரு கிழவி யின் பக்கத்தே அவள் பெற்றெடுத்த மைந்தன் போல் பணி வோடும் நின்றான் கிள்ளி. அவள் யார்? ஆமூர் அன்புக் கிழவி தான் அவள். “நீ மறந்தாலும் நான் உன்னை மறவேன்! ஒரு நாள் உறையூருக்கு வருவேன்” என்று அனுப்பி வைத்தாள் அல்லவா அவள்?