உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. வள்ளலைப் பாடிய வளவன் கதை

கருவூர் பழமையும் பெருமையும் வாய்ந்த பேரூர். அவ் வூரினை அடுத்து ஆன்பொருனை என்னும் ஆறு அழகுற ஓடி வளமிகச் செய்கிறது. மைந்தரும் மகளிரும் ஆன்பொருனைக் கரைகளிலே அமைந்துகிடக்கும் மணல் மேடுகளிலே மற்போர் புரிவதும், கழங்கு ஆடுவதும், ஓடியாடுவதும், ஓய்வுகொள்வதும், நாள்தோறும் நடைபெறும் நிகழ்ச்சிகள்.

ஆற்றினை அடுத்துக் காவற்காடு இருந்தது. காவற்காடு, நகரைப் பகைவர்களிடமிருந்து காப்பதற்காகக் காவலர்களால் அமைக்கப் பெற்றதாகும். காவற்காட்டு மரங்களை எவரும், எக்காரணம் கொண்டும் அழிக்கக்கூடாது, மரத்தை அழிப்பதும், மன்னனை அழிப்பதும் நிகர் என்னும் நெறியுண்டு. ஆதலால் அழிபாட்டுக்கு ஆளாகாது பேணி வளர்க்கப் பெற்ற அவை, வலிவும் பொலிவும் உடையவையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

காவற்காட்டினை அடுத்து முதலை, சுறா ஆகியவை உலாவித் திரியும். ஆழ்ந்து அகன்ற அகழும், அதனை அடுத்துப் பல்வகைப் பொறிகளும் பொருத்திவைக்கப் பெற்ற திண்ணிய மதிலும் உண்டு. இம் மூன்று அரண்களையும் அழித்தால் அன்றி நகரையோ, அரண்மனையையோ அடைய இயலாது.

நண்பர்கள் சென்றுவர எளிய நகர் கருவூர்! ஆனால் பகைவர்கள் சென்று வருவர அரிதினும் அரிய நகர். என்ன அருமைப்பாடுடைய ய அரணைக் கொண்டதாயினும் ஆள் வோம் உள்ளத்துள்ள 'உரம்' தானே பேரரண் . அவ்வரண் இன்றேல் எவ்வரண்தான் உதவும்?

ஒரு மகளிர் மணல் மேட்டிலே பொன்னால் செய்யப் பட்ட கழங்குகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். ளைஞர்கள் மணற்கரைகளிலே புரண்டு உருண்டு களிப்புற்றுக் கொண்டிருந்தனர். நீருள் வீழ்ந்து நீந்திச் செல்வோரும், தொட்டு விளையாடுவோருமாக ஆறு பொலிவுடன் விளங்கிக் கொண்

டிருந்தது.