புறநானூற்றுக் கதைகள்
205
முட்டைகளைத் தூக்கிக்கொண்டு திட்டை ஏறிச் செல்லும் எறும்புக்கூட்டம் போல மகளிர் நீர்க் குடங்களுடன் கரையேறிக் கொண்டிருந்தனர். பாடுவோர், பாட்டொலியும், கதை நொடி பேசுவோர் ஒலியும், விளையாடுவோர் களிப்பொலிவும் மாறி மாறி ஒன்றை ஒன்று விஞ்சி ஒலித்துக் கொண்டிருந்தன.
இத்தகைய வெளியிலே, தேனீக்கூட்டமோ என்று ஐயுறு மாறு வீரர்கள் வந்தனர்; கொக்குக் கூட்டமோ என்று மயங்கு மாறு குதிரைகள் குவிந்தன! மேகம் திரண்டுவிட்டதோ என்று பேசுமாறு யானைகள் பெருகின; குன்றுகள் ஓடி வருகின்ற னவோ என்று புகலுமாறு தேர்கள் நிறைந்தன; ஒன்றன் பின் ஒன்றாக வந்து காவற் காட்டினைச் சூழ்ந்து நின்றன.
குதிரைகளையும் யானைகளையும் காவல் மரங்களிலே கட்டிவிட்டு வீரர்கள் சுற்றித்திரிந்தனர். அவர்கள் சோழ நாட்டைச் சுற்றித்திரிந்தனர். அவர்கள் சோழ நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை, அவர்கள் தேர்களிலும், கைகளிலும் இருந்த ‘புலிக் கொடிகள்’ காட்டின.
மகிழ்ச்சியோடிருந்தவர் மனத்தை அச்சம் பிடித்துக் கொண்டது. கடுங்காற்றுக்குத் தப்பியோடும் காட்டு மயில் போல் மகளிர் ஓடினர். ஏதுமறியா இளைஞர் வெறித்து வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தனர். வீரமிக்கவர் வேந்த னிடம் செய்தியைக் கூறியிருந்தனர். இருந்தாலும் வேந்தன் எதுவும் செய்தான் இல்லை, கோட்டையைவிட்டு யேறவும் இல்லை. படைகளை ஏவிப் போர் செய்யுமாறும் தூண்டவில்லை. இருக்குமிடம் தெரியாமல் அடங்கிப் போய்க் கிடந்தான்.
வளி
நாட்கள் சில உருண்டோடின. புலிக்கொடி வைத்திருந்த வீரர்கள் புலியாகவே மாறி விட்டனர். எவரையும் மதிலைவிட்டு வெளியேறுவதற்கு விடவில்லை. உள்ளே நுழையவும் விட வில்லை. ஆற்றுக்குச் செல்லவோ, வயல் வெளிகளுக்குப் போகவோ முடியவில்லை என்றால் எவ்வளவு கொடுந்துன்பம்? ஒரு வேந்தன் முற்றுகையிட்டிருக்கின்றான்; ஒருவன் வெளி யேறாமல் அடங்கிக் கிடக்கின்றான்! ஆனால் இவர்கட்கு இடையே இருக்கும் மக்களுக்கோ இன்னல்!
66
"ஏன் இவர்கள் வளைத்துக்கொண்டிருக்கிறார்கள்? நம் வேந்தன் இச் சோழ வேந்தனுக்கு என்ன கேடு செய்தான்? அவனே கேடு செய்திருந்தாலும் நகரமக்கள் என் செய்வர்?