உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

இளங்குமரனார் தமிழ்வளம்

-

5

"வீரம் வேண்டும் ஆண் மகனுக்கு அரசனுக்கு வீரம் இல்லாவிட்டாலும் மானமாவது வேண்டும்! இரண்டுமில்லாத வாழ்வு என்ன வாழ்வு! ஒன்று கோட்டையைவிட்டு வெளியேறி வந்து முற்றுகை இட்டிருப்பவனோடு போரிட வேண்டும். இல்லாவிடில் “நான் தோற்றேன்” என்று காலடியிலே வீழ்ந்து கிடக்க வேண்டும். இரண்டும் இன்றி அடங்கிக் கிடப்பது இழிவு”

66

உண்மையான வீரன் தனக்கு இணையான வீரனுடன் அன்றிப் போரிடமாட்டான். மயிர் குலைந்தோன், ஆடை அவிழ்ந்தோன். ஒத்தப் படை எடாதோன் ஆகியவர்களை ஆ விலக்கி, அவர்களுடன் போரிடாத தமிழ் மகன் வீரம் எங்கே? இவன் வீரம் எங்கே? அடைபட்டுக் கிடக்கும் இவனைப் படையுடன் வளைத்துக் கொண்டிருக்கும் சோழ வேந்தனுக்கும் இழிவு தான்!

66

'ஆன்றோர்கள் இல்லையா? அறவோர்கள் இல்லையா? அமைச்சர்கள் இல்லையா? இருந்தும் எமக்கென்ன என்று நெஞ்சத்தை இரும்புக் கூடாக்கிக் கொண்டார்களா? வாய் மூடிக்கொண்டு 'வாளா' கிடக்கின்றார்களா? உற்றதை அறியாத ஓட்டைக் காதினர் ஆகிவிட்டார்களா? கொடுமை! கொடுமை!

பேசிக்

இப்படியெல்லாம் நொந்துபோய் மக்கள் கொண்டனர். உரத்துடன் கொதித்து எழ வேண்டியவனே ஒடுங்கிக் கிடக்கின்றான். மற்றவர் என்ன செய்வர்?

மேலும் சில நாட்கள் நடந்தன. சோழன் முற்றுகையை விட்டபாடும் இல்லை. மதிலுக்குள் இருக்கும் சேரன் வெளி யேறிய பாடும் இல்லை.

66

வட்டுக; வெட்டுக; காவல் மரங்களை வெட்டுக; எத்தனை நாட்கள் மதிற் புறத்தே காத்துக் கிடப்பது. போருக்கு வராது அடங்கிக் கிடக்கும் வேந்தன் காதுகளிலே முட்டுமாறு வெட்டுக” என்று படைத் தலைவன் வீரர்களை ஏவினான்.

கூர்மையான கோடரிகள் கிளம்பின; “கட்டுக்கட்டு என்று மரங்கள் வெட்டப்பட்டன.'மடமட' என்று கிளைகள் முரிந்து வீழ்ந்தன. காவற்காட்டை வளைத்துக்கொள்வதே காவலனை இழிவுபடுத்தியதாகும். மரத்தை வெட்டுவது எத்தகைய இழிவாகும்? மன்னனை வெட்டுவதற்கும் மரத்தை வெட்டுவதற்கும் வேறுபாடு இல்லை. இத்தகைய இழிபாட்டையும், அழிபாட்டையும் பொருளாகக் கொள்ளாது, உயிரே பெரிதென எண்ணிக்கிடக்கும் வேந்தன் வீரத்தை எப்படிப் புகழ்வது?