232
―
இளங்குமரனார் தமிழ்வளம் 5
சிதைத்துப் போட்டது போலாக அல்லவோ உள்ளது என் று வருந்தியது அம்மெல்லிய மனம்; மீண்டும் அவர் கண்கள் அழிபாட்டைக் கண்டன.
66
எத்தனை எத்தனை யானைகள்; அத்தனையும் ஓய்ந்து விட்டனவே; மண்ணிலே சாய்ந்தும் விட்டனவே; காற்றுப் போல் விரைந்து செல்லும் தேர்கள்தான் எத்தனை? அவையும் என்ன ஆயின? கண்ட துண்டங்களாகிச் சிதைந்து பட்டனவே. குதிரைகள் தாம் எத்தனை? ஒன்றாவது நிமிர்ந்து நிற்கின்றதா? நிலத்திலே வீழ்ந்தும் அவற்றின் மீது இருந்த வீரர்கள் கீழே இறங்கினார்களா? தலையற்றுப்போய் முண்டமாகியும் விழ வில்லையே?
வீரர்கள் மட்டுமா இறந்தனர். வேந்தர்களும் வேல் துளைத்துச் சென்றமையால் இறந்தனரே! இனி இவர்கள் நாடுகள் என்ன ஆவது? நாட்டிலே வளம் உண்டு. வளத்தினைக் கொண்டு வருவோர்க்கு விருந்து செய்து பேணிக் காக்கும் வளைக்கை மகளிர் உளர்; ஆனால் இனிப் பயன்படுமோ?' என்று புலம்பினார்.
எதிர்காலத்தவராயினும் எண்ணிப் பார்த்துத் திருந்த வேண்டும் என்று கருதிய பரணர் தம் கருத்தை ஒரு பாடல் ஆக்கினார். அழிபாட்டுக்குமேல் அழிபாடு சூழும் கேட்டை, இறந்து பட்டோர் அன்றி இருப்போர்க்கு உளதாம் கேட்டை, அந்நாட்டினரே அன்றி அயனாட்டினார்க்கும் எய்தும் கேட்டை விளக்கமாக உரைத்தார். அருள் உள்ளம் அச்சமிக்க களம் சென்றும் அஞ்சாது அருளுரை கூறியது. அக்களத்தில் கிடந் தோர் அறியும் நிலைமையில் இல்லை. ஆனால் பின் வரு வோராவது அறியவேண்டும்! அறிந்து திருந்தவேண்டுமே!
நாட்டின் நலங்கருதி உரைக்கும் உரைமணிகள் எப் பொழுது சிறக்கும்? எப்பொழுது பயன்படும்? ஏற்றுப் போற்று வோர் - நடைமுறைக்குக் நடைமுறைக்குக் கொண்டு வருவோர் உளராயின் அன்றோ! "தேன்” என்பது சுவைமிக்க சொல்தான். ஆனால் தேன் என்னும் சொல்லுடன் அப்பொருளும் வந்தால் அல்லவோ நற்சுவை!
மக்கள் சுவையை விரும்பாமலா இருக்கின்றனர்? விரும்பு கின்றனர். தங்களுக்கு மட்டுமே உரியதாக இருக்கவேண்டும் என விரும்புகின்றனர்; பிறர் விரும்பினால் வெறிகொள்கின்றனர், வெறியை எவ்வெவ் வழிகளிலெல்லாம் வளர்க்க வேண்டுமோ