புறநானூற்றுக் கதைகள்
233
அவ்வழிகளிலெல்லாம் வளர்த்து விடுகின்றனர். வளர்ந்த வெறி 'வெறியாட்டம்" ஆடாமல் போகுமா? பிறரை ஆட்டாமல் போகுமா?
L
மனிதர்க்கு மானம் வேண்டும்; ஆண்மையும் வேண்டும். ஆனால் அந்த அந்த மானமும் ஆண்மையும் போர்க்களத்தில் முளைத்துக் கிளைத்து முதிர்ந்து கனி தரவேண்டும் என்பது இல்லை. தன்னை - தன் குடும்பத்தை - தன் நாட்டை - உலகத்தைக் காக்குமாறு பயன்படவேண்டும், மானத்தையும் ஆண்மையை யும் காக்குமாறு புகுந்த செயலிலே நாடுகளை அழிந்து படுமாறு ஆவது கொடுமை!
சங்க காலத்தே ஆண்மையும் மானமும் மிக ஆட்சி செலுத்தின. போர்க்களத்தையே அரங்கமாகக் கொண்டு மன்னர்களைக் கூத்தர்களாக ஆக்கி ஆட்சி செலுத்தின. பார்வையாளர்களும் இல்லாமல் போகவில்லை; அறிவு மாண்பும், ஒழுக்க மாண்பும் உரிமை மாண்பும் பல்கியிருந்த காலம்தான்.
எனினும் “போர் வீரம்” பாராட்டுதற்குரிய புகழ்வழியாக புகழ் வழிகளுள் சிறந்ததாகப் போய்விட்டது. அன்றும் போர் வறியை வெறுத்தோர், ஒழிக்க முனைந்தோர் இல்லாமல் இல்லை. எனினும் அவர்கள் எண்ணிக்கை குறைவு. வெறியாளர் எண்ணிக்கையோ நிறைவு. போர் நின்றபாடில்லை.
6
என்னதான் உணர்ச்சியால் உந்தப்பட்டுப் போருக்குச் சென்றாலும் வெல்பவர் ஒருவர் -தோற்பவர் ஒருவர். ஆனால் இருவரும் வெல்வது காணமுடியாத ஒன்று. குடக்கோ நெடுஞ் சேரலாதனும், சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியும் இணையான வீரர் ஆயினர்! இருவரும் வென்ற வீரர் ஆயினர்! இதனால் உலகங்காணா உயர் வீரர்களே இவர்கள்.
3
ஒரு பெருங்கூட்டம்; ஆண்கள் பெண்கள் அனைவரும் கூடிய கூட்டம்; கிழவரும் இளையரும் திரள் திரளாய்க் கூடி யிருக்கின்றனர். யாழும் குழலும் வைத்திருக்கும் கலைஞர்களே அன்றி வேலும் வில்லும் வைத்திருக்கும் மறவர்களும் கூடி யிருக்கின்றனர். எல்லோரும் இமைகொட்டாமல் உற்றுநோக்கிக்
காண்டிருக்கின்றனர்!