புறநானூற்றுக் கதைகள்
235
"உயிருடன் இருப்பது பெருமையன்று. வடக்கிருந்து இறப்பதே முறை” என்று கருதி வடக்கிருக்கிறான்.
உடலெல்லாம் குருதி பெருகிக் கிடக்கிறது. பக்கமெல்லாம் கண்ணீர் வடித்து நிற்கின்றனர். சூழலெல்லாம் பிணக்காடுகளும் அறை குறை உயிருடன் கிடந்து அலறுபவற்றின் ஒலியும், பிணங்களை இழுத்துச்சென்று வயிறு புடைக்க விரும்பும் நாய், நரி, கழுகு, கூகை இவற்றின் ஆரவாரமும் மிகுகின்றன. வடக்கு ருப்போனுக்கு எதிரே தெற்கு நோக்கி ஒருவன் நிற்கின்றான்; வடக்கிருப்பவனது மார்புப் புண்ணைப் பார்த்துப் பார்த்து மனந்தளருகின்றான். தன் வீரத்தை நினைத்து நினைத்து வெட்க முறுகின்றான்.
அவனே போர்க்களத்தில் வேலை மார்பு நோக்கி ஏவி யவன். அவனே வடக்கிருக்கும் வீரன் மார்பைத் துளைத்தவன். வேலின் கூர்மையும், கையின் வன்மையும் தங்கள் வரிசையைக் காட்ட அதுகண்டு உவகை பூத்தவன். “வெற்றி, வெற்றி பகைவன் வீழ்ந்தான் என்று முழங்கியவன். அவனே இப்பொழுது கண்ணீர் வடிக்கின்றான்.
·
“போரில் வென்றேன் யான்; புகழால் வென்றான் இவன். வெற்றிகளுள் எவ்வெற்றி சிறந்தது, புகழ் வெற்றியே சிறந் தது. இவன் வெற்றியே சிறந்தது வென்றும் தோற்றேன்” என்று நெக்குருகி நிற்கின்றான்.
வடக்கிருப்பவன் யாவன்? அவனைக்கண்டு கலங்கிக் கண்ணீர் வடிப்பவன் யாவன்?
வ க்கிருப்பவன் சேரமான் பெருஞ் சேரலாதன் என்னும் பெயரான். சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியோடு போரிட்டுப் போர்க்களத்திலே மாண்ட குடக்கோ நெடுஞ் சேரலாதனுக்குப்பின் சேர நாட்டின் அரசினை ஏற்றுக் கொண்டவன். இளமை முறுக்கு மிக்கவன். எழுச்சியின் எல்லை போயவன். விரைவில் சோழன் மீது வஞ்சினங் கொண்டான். தன் முன்னோனைக் களப்பலியாக்கிய சோழப் பரம்பரையைத் தாக்கி யழிக்குமாறு ஊக்கம் உந்தியது. போருக்குக் கிளம்பி விட்டான்.
666
ஒரு
மலை நாட்டிலே யானைக்குக் குறைவு ண்ட IT? சூலுக்குப் பத்து குட்டிகள் போடுகின்றனவா நின்நாட்டில் யானைகள்?' என்று வியந்து கேட்குமாறு விளங்கிய நாடன்றோ சேரநாடு' கருங்கற் பாறைகளின் இடையே பசுக்கள் திரிவது