உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

இளங்குமரனார் தமிழ்வளம்

5

போன்று களிறுகள் திரியும் நாடு” என்று பாராட்டிப் புகழும் நாடன்றோ அந்நாடு: நிறைந்து வந்தன யானைகள்; சேரனும் வீரச் செம்மல்தான். எனினும் எதிர்த்து நிற்பவன் எத்தகையன்?

கரிகளுக்குக் காலன் ஆனவன். கரிகாலன் என்பது அவன் பெயர் கால்கரிந்தவன் என்றும் கரிகளைக்காலால் எற்றித்தள்ள வல்லான் என்றும் காரணம் காட்டுவர். ஆனால் அவை உண்மையோ பொய்யோ! அவன் கரிகளுக்குக் காலனாக அமைந்தவன் என்பது மட்டும் உண்மை. எள்ளளவும் ஐயமற்ற உண்மை காவிரிக்கு அணைகட்டிக் கழனி நாடாக்கிய கரிகால் வளவன்தான் இவன்.

இளமையிலே பகைவர்க்கு இடையே சிக்கிக்கொண்டான் இவன். பகைவரைப் பொருட்டாய் எண்ணினானா? இளைத் தானா? ஏங்கிக் கிடந்தானா? பகைவர்கள் சிறுவனான இவனைச் சிறுவன் என்றும் எண்ணாது அச்சங்கொண்டு அரணுக்குள். வைத்துக் காத்தனர். ஆனால் அரணுக்குள் அடைபட்டுக் கிடக்கவில்லை

அரியேறுபோல் கிளம்பினான். மடங்கல்போல் மதில் மேல் தாவினான். கொம்புடைய பேராண்மைக் களிறுபோல் குழிந்து ஆழ்ந்திருந்த அகழைத் தாண்டினான். பகைவர்கள் கண்களுக்கு அகப்படாமல் பாதுகாப்பான இடத்திற்குச் சேர்ந்து விட்டான். பச்சிளம் பருவத்தே இருந்த இந்த ஆண்மை பாராளும் வேந்தன் ஆனபிறகு விஞ்சாமல் குறையவோ செய்யும்?

கரிகாலன் அருமை மாமன் இரும்பிடர்த் தலையார். நூலறிவும் நுண்ணறிவும் வாய்ந்தவர். அரசியலும் பொரு ளியலும் ஆய்ந்து கண்டவர். கவிப்பெருக்கும் கலைப்பெருக்கும் மிக்கவர். அவரே மருகனை மறைவிடத்தில் வைத்துக் காத்தவர். தக்க நாளிலே மன்னனும் ஆக்கிவைத்தார். பகைபட்டு நின்றோர் செய்தியினை அறிந்து, நகைப்பட்டுப் போயினர். அற்றை இளமையிலே பகைவர் முகத்தில் கரியைப் பூசிக்காட்டி அவர்க்குக் காலனாக இருந்தவனன்றோ இக் கரிகாலன்? இற்றை நிலையில் எத்தகையனாக இருக்கமுடியும்?

ஆண்மை இப்படி இருக்க. அறிவுடைமையும் அரசியல் திறமையும்தான் எவ்வாறு இருந்தன? தங்கள் வழக்குக் காரணமாக நாடாள்வோனிடம் முறையிட வந்த முதியவர் இருவர் இளைஞன் கரிகாலனைக் கண்டு “இவனோ மன்னவன்? இவ்விளைஞனோ மன்னன்? அனுபவமோ, அரசியல் அறிவோ