புறநானூற்றுக் கதைகள்
237
பெற்றிருக்க இயலாத இவ்விளையனோ முதியராம் நம் வழக்கை முறையோடு கேட்டு நிறைபடச் செய்பவன்?
"இவனிடம் முறைகேட்டு நிற்பதே பெருங்குறை” என்று பேசிக்கொண்டு வெளியேறினர். அதனை வாயில் காவலர் வழி அறிந்துகொண்ட கரிகாலன், "வேந்தர் உள்ளே இருக்கிறார்; இவனல்லன்” என்று அவனால் அறியச் செய்து அவர்களை மீண்டும் வரச்செய்தான்.
ய
வந்தவர்களோ நரைத்த தலையும், திரைத்த முகமும் முதுமைக் கோலமும் உடைய மன்னரைக் கண்டு மகிழ்வு காண்டனர். புவி யாள்பவனும் புன்முறுவல் பூத்து வழக்கினை நன்முறையில் கேட்டறிந்து “நன்று நன்று” என்று அவர்கள், இருவரும் ஏற்குமாறு நீதிமுறை செய்தான்.
“மன்னன் மாண்பு என்னே! மதிநலம் என்னே! ஆய்வியல் அறியும் அரசியல் தெளிவும் என்னே! சோழ வேந்தனல்லன் இவன். அறமாம் தெய்வமே இவ்வரசன் உருவில் அரியணையில் அமர்ந்துள்ளது. இத்தெய்வத்தின் அடிக் கீழ்வாழும் பேறே பெறு” என்று வியந்து பாராட்டினர். விடை பெறவும் விரும்பினர்.
அப்பொழுது.மன்னன் ‘நரை’ அகன்றது; கருமயிர் முகிழ்த் தது; திரைச் சுருக்கும் அகன்றது; திங்கள் முகம் திகழ்ந்தது; முதுமைக் கோலம் அகன்றது. இளமைத் திருக்கோலம் பொலிந் தது. ஆம்! அரசன் முகமூடிகளை அகற்றினான். வெட்கம்! வெட்கம்! முதியவர்களுக்கு வெட்கம் தாங்க முடியவில்லை.
66
இவ்விளைஞன் யாவன்? முன்பு கண்ட இளைஞனே இவன். இவனே முதிய வேந்தன்! ஆ! ஆ! இளைஞன் என்று வனைப் பழித்தோம்; முதியனாய் முறை கூறியது கண்டு வாழ்த்தினோம். இவன் திறம்தான் என்னே? வையும் வாயை வாழ்த்துமாறு செய்யவைப்பது எல்லாராலும் இயலக் கூடியதா?” என்று வியப்பிலே பேசி நின்றனர். சோழன் பெரியவர்கள் கருத்தை அறியமாட்டானா? நொடிப்பொழுதில் அறிந்துகொண்டு விட்டான்.
66
முதியர்களே! வேதனையும் வேண்டாம். வேண்டாம். வியப்பும் வேண்டாம். முதுமை இளமை இவற்றைப் பொறுத்தது அன்று அறிவுடைமை. அது தனிப்பட்டோர் முயற்சியையும், குலத்தின் இயற்கையையும் சார்ந்தது. நடந்தது பற்றிக் கவலைப் படவேண்டாம். இனிதில் போய் வருக” என்று அனுப்பி வைத்தான்.