‘பாரி’
4. நோகோ யானே
அருமையான பெயர்! பெருமையான பெயரும் கூட! முல்லைக்குத் தேர் தந்த முதிர் வள்ளல் பாரி.
ஓரறிவு உயிரிக்குக் கூட உருகி உதவும் உதவியாளன் அவன் என்பதன் சான்று ‘முல்லைக்குத் தேர்’!
ஆடும் கொடிக்கு, ஓடும் தேரை நிறுத்தும் உள்ளத்தான், பாடும் புலவரையும் ஆடும் கூத்தரையும் எப்படியெல்லாம் போற்றியிருப்பான்!
மலை.
பாரியின் மலை பறம்பு மலை! அது இந்நாள் பிரான்
பறம்பின் எல்லை ‘பறம்புக்குடி' வரை இருந்தது. பறம்புக் குடியே, ‘பரமக்குடி'யாகியுள்ளது.
முந்நூறு ஊர்கள் பாரிக்கு இருந்தன. அம் முந்நூறு ஊர்களையும் தன்னாட்சியாளுமாறு உரிமை வழங்கிப் புலமை யரிடம் ஒப்படைத்த நலமையன் பாரி!
நாடு காவல் கடனைப் பீடுறச் செய்வதற்குக் கொண்ட பெருவழி இவ்வழி.
பாரியின் புகழ் பரவியது! பாராளும் பிற வேந்தர்களிலும் பெரிதாகப் பரவியது.
பாரிதான் கொடையாளனோ, பிறனொருவன் இலனோ? எனவும் வினா எழுந்தது.
6
"ஏன்!பாரி ஒருவன்தான் கொடையாளன் என்று எவர் சொன்னார்? அவனைப் போல் கைம்மாறு கருதாமல் கொடுக்க மாரி என்பதொன்றும் உண்டே” என்று விடையும் பிறந்தது.
பொருளால் வாழ்வால் கலையால் மட்டுமா பொறாமை உண்டாகும்? புகழாலும் பொறாமை உண்டாகும் என்பதன் சான்று பாரிக்கு உண்டாகிய பகை.