உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

அந்த உணர்வு எங்கே?

281

ன்னும் கேட்பாயாக; துணிந்து வந்து நின்னொடு போரிட நிற்கும் இவர்கள் இப்போரில் தோற்றுப் போக நீயே வெல்கிறாய் எனக் கொள்வோம்! நீ வென்ற அரசை நின் காலத்திற்குப்பின் இவரை விடுத்து எவர்க்கே வழங்குவை? "போர் வேட்கையுடையவனே; யான் கூறியவாறு அன்றி இப்போரில் அவர்கள் வெற்றி பெற நீ தோற்று விடுவையாயின் பகைவரும் நகைக்க நீ எய்தும் பழிக்கு எல்லையும் உண்டோ?

66

எண்ணிப்பார் வேந்தே, எண்ணிப்பார். எப்படி எண்ணி னாலும் சரி, உன் போர்க்கோலம் அழகிது அன்று. அமைந்து, போர் ஒழிந்து, அறத்தின் பாற்பட்டு நிற்றலே நீ செய்தக்க கடமையாம்” என்றார்.

நல்லுரை கூறிய சான்றோர் சொல்லைச் செவ்விதிற் கேட்ட வேந்தன், அவர் முகம் நோக்கினான். அமைந்து தன் அகம் நோக்கினான். நிலத்தை நோக்கிக் கொண்டே நடந்து களத்தைவிட்டுச் சென்றான். சென்ற வேந்தன் கோப்பெருஞ் சோழன். நன்றறி சொல்லை நயமாய் உரைத்த சான்றோர் புல்லாற்றூர் எயிற்றியனார் (புறம். 213)

மாறுபட்டு நிற்கும் பெற்றோர்க்கும் மக்களுக்கும் இடையே புகுந்து கேடு செய்வார் எத்தனை பேர்?

வம்பிலும் வழக்கிலும் தலைப்படுத்துவார் எத்தனை பேர்? வாளை உருவிவிட்டு வன்பகையாய் வளர்த்து அலைக்கும் கொலைக்கும் ஆளாக்கும் ஆள்கள் எத்தனை பேர்?

அவரைச் சார்ந்தும் இவரைச் சார்ந்தும் என இருபாலும் எதிரிட்டு நின்ற ஊர்ப்பகையாக்கி உவப்பார் எத்தனை பேர்?

ஊர் ஊர்க்குப் புல்லாற்றூர் எயிற்றியனார் இருக்கும் பேறும், பிறக்கும் பேறும் இல்லாமல் இருக்கலாம். ஆனால். அவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னே முழங்கிய முழக்கம் மறைந்துவிட வில்லை! மணியொலி செய்து கொண்டே இருக் கிறது. அதனை ஏற்றுக் கொண்டு தொண்டு பூணும் தொண்டர் மணிகளே ஊரூர்க்கு வேண்டும்!

“நின்றலை வந்த இருவரை நினைப்பில்

தொன்றுரை துப்பின்நின் பகைஞரும் அல்லர்”

என்னும் அந்த உணர்வை எடுத்துரைப்பார் எவர்?