282
இளங்குமரனார் தமிழ்வளம் 5
―
66
"நினையுங் காலை நீயும் மற்றவர்க்கு
அனையை இல்லை
என்னும் அருமை உணர்வை எடுத்துரைப்பார் எவர்?
66
‘ஒழிந்த தாயம் அவர்க்கு உரித்தன்றே”
என்னும் உண்மை உணர்வை எடுத்துரைப்பார் எவர்?
“எண்ணில் காட்சி இளையோர் தோற்பின் நின்பெருஞ் செல்வம் யார்க்கெஞ் சுவையே'
என்னும் உறுதி உணர்வை எடுத்துரைப்பார் எவர்? “அமர்வெஞ் செல்வ நீ அவர்க்கு உலையின் இகழுநர் உவப்பப் பழியெஞ் சுவையே”
என்னும் இடிக்கும் உணர்வை எடுத்துரைப்பார் எவர்?
66
'ஒழிகதில் அத்தை நின் மறனே; வல்விரைந்து
எழுமதி வாழ்கநின் உள்ளம்’
என்னும் ஆணை உணர்வை எடுத்துரைப்பார் எவர்?
“புல்லாற்றூர் எயிற்றியனார் உளரோ, உளரோ" எனத் தமிழுலகம் ஏங்கும் கால நிலை இது! "உள்ளேம் உள்ளேம், அவரை உள்ளாகக் கொண்ட உள்ளமுடையேம் உள்ளேம்; துணிந்துநின்று கடனாற்ற உள்ளேம்!' என்னும் தொண்டரணி எழுமாறு தூண்டவல்ல “அந்த உணர்வு எங்கே? எங்கே?”