புறநானூற்றுக் கதைகள்
13
நின்றனர். வெட்டப்படப் போகின்றோம் என்ற உணர்ச்சி அற்று மேளதாளம் ஒலிக்க, மாலை கழுத்திலே புரள, தழை தின்று காண்டிருக்கும் அறிவில்லாத ஆடுகளைப் போல சிறுவர் இருவரும் நின்றனர்! பாவம் வயது எவருக்கும் பத்தினைத் தாண்டியிருக்காது.
ப
யானை சிறுவர்களை நெருங்கி விட்டது. இனித் தன் காலைத் தூக்கிச் சிறுவர் தலையிலே அழுத்த வேண்டியதுதான் குறை, அந்தோ! யானையும் தன் தொழிலைச் செய்யத் தொடங்கி விட்டது. மன்னவன் ‘நடக்கட்டும்” என்றதும் ஆணையை நிறைவேற்ற வேண்டும். அவ்வளவு தான். வேலை முடிந்தது.
அரசனும் ஆணையிட வாயைத் திறந்து விட்டான், "பொறுங்கள், பொறுங்கள்; கொலையை நிறுத்துங்கள்; நிறுத்துங்கள்” என்னும் பரபரப்புக் குரல் கூட்டத்தார் காது களில் முழங்கியது. குரல் கேட்ட பக்கம் நோக்கினர், “மன்னவன் ஆணையையும் மறுத்து உரைக்கும் ஆள் உண்டோ?” என்று திகைத்து நின்றனர். அரசனும் குரல் கேட்ட திக்கை நோக்கினான்.
படபடப்பு உணர்ச்சியோடும், வியர்த்து விறுவிறுத்து நடையோடும் ஒரு புலவர் வந்தார். அவருடைய அருள் நிறைவைக் கண்கள் காட்டின. அறிவு முதிர்வைப் படர்ந்த நெற்றி விளக்கியது. ஆத்திர நடை நல்லெண்ணத்தை வெளிக் காட்டியது. எல்லோரும் விலகி நின்று வழி விட்டனர். மன்னர் முன்னிலையை அடைந்தார் புலவர்.
குரல் வந்த திசையை நோக்கி நின்ற வேந்தன் புலவரைக் கண்டவுடன் புன்முறுவல் பூத்தான், புலவரைக் கட்டித் தழுவிக் கொண்டு அன்பு காட்டினான். ‘புலவர் பெருமானே! கொலையை நிறுத்துமாறு கூறியது எதற்காக? என்னை எதிர்த்தவர்களுக்கு உய்வே கிடையாது என்பதை உலகம் உணர வேண்டாமா? நீர் என்ன சொல்கின்றீர். பகையை அழிக்கத் தவறும் வேந்தன் பட்டழிவான் என்பது மெய்யுரை அல்லவா!” என்று கூறினான். புலவர் உரையை எதிர் நோக்கி நின்றான். புலவர் பேசினார்.
66
'அரசே! உன் பரம்பரை எவ்வளவு உயரிய பரம்பரை! கருணையுள்ளம் அன்றிக் கல்லுள்ளம் படைத்தோர் எவரும் உன் முன்னோருள் இருந்தது உண்டோ? ஈரநெஞ்சம், இன்னருளும் கொண்டு உலகப் புகழுக்கு உறைவிட மானோர் வழியில் வந்தவன் நீ என்பது போலுமொரு பெருமை உனக்கு உண்டோ?