உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

இளங்குமரனார் தமிழ்வளம் 5

வெருண்டு வந்த புறவுக்காக அருள் காட்டினோன் உன் முன்னோன் அல்லவா! அவன் அப் புறாவின் உயிரைக் காக்குமாறு தன் அரிய உடலையே அரிந்து அரிந்து வைத்தானே! அத்தகையவன் உன் முன்னோன் என்பதால் ஏற்படும் சிறப்பை எப்படித்தான் புகழ்வது?

"நின் புகழ் இவ்வாறு இருக்க, இதோபார்! இச் சிறுவர் களின் முன்னோர்தான் எத்தகையர்! பிறர் வறுமைப் பிணியைப் போக்குவதையே வாழ்வுப் பணியாகக் கொண்டிருந்தவர் அல்லரோ! பிறர் பசியையோ, வறுமையையோ கேட்டுக் கல் மனம் கொண்டு கை விரித்தவர் இல்லையே! பிறர் கலங்குவதைக் காணப் பொறுக்காதவர்களாயிற்றே! அவர்கள்தான் என்ன கேடு செய்தார்கள்? அன்றி இச் சிறுவர்கள்தான் என்ன கேடு செய்தார்கள்?

ச்

'கூட்டத்தைக் கண்டு வாட்டமுற்று அழுத சிறுவர்கள், யானையின் வருகையைக் கண்டு வியப்புடன் நோக்கி நிற்கின்ற னரே! என்ன நேரப்போகின்றதோ என்பதை அறியாமல் மணி யோசையைக் கேட்டு நிற்கும் இச் சிறுவர் தான் உன் எதிரிகளா? உன் முன்னோர் பெருமையை எண்ணிப்பார்! இவர்தம் முன் னோர் இயல்பையும் நினைத்துப்பார்! புலவனான என் வேண்டுதலையும் ஆராய்ந்துப் பார்! அதற்குப் பின் விருப்பம் எதுவோ அதனைச் செய்து முடி! இதனை இச் சமயத்தில் நினைவுபடுத்தல் ஒன்றே என் கடனாம். வேந்தே விரும்பியதைச் செய்! நன்றாகச் செய்” என்றார்.

உன்

ச்

புலவர் உரை வேந்தனைக் குலுக்கி எடுத்தது. தன் வஞ்சினத்தை முடிப்பதினும் தன் பரம்பரைப் பெருமையை நிலைநாட்டுவதே பெருமையாகத் தோன்றியது. புலவர் உரையைத் தட்டுவதின் கேட்டையும், ஏற்றுப் போற்றுவதின் மாண்பையும் உணர்ந்தான். சிறுவரை யானைக்காற் கீழிருந்து விடுவித்துப் பெரும்பேறு பெற்றான். மைந்தர் இருவரும் புலவர் செயலை எண்ணி மகிழ்ந்தனர்! புலவரோ அரசன் செயலை வாயார வாழ்த்தினார். பொது மக்கள் புகழ்மாலை பொழிந்து கொண்டு சென்றனர்.

யானையின் காலுக்குக் கீழ்க் கிடந்து மடியும் நிலைக்கு ஆட்பட்ட சிறுவர் யார்? அவர் தந்தையார் யார்? அவர் வரலாறு என்ன?

இளஞ்சிறார் இருவரும் வள்ளல் பெருமகனாம் மலைய மான் திருமுடிக் காரி என்னும் வேந்தன் மைந்தர் ஆவர். மலைய