16
இளங்குமரனார் தமிழ்வளம்
―
5
இவ்
காரியின் ஆணைவழி நிற்கும். எல்லை கடந்து வந்து அவன் மண்ணைக் கவர்ந்து செல்லாது. கடல் நிலைமையே வாறானால் மற்றைக் காவலர் நிலைமை என்னாம்?
ல
காரிக்கு முள்ளூர் என்னும் ஓர் ஊர் உரிமையானதாக இருந்தது. அவ்வூர் நீர்வள, நிலவளங்களைத் தன்னகத்தே கொண்டது. பறையொலிப்பதுபோல அருவி விழும்; நீரில் புகுந்தாற்போன்று தண்ணிய தன்மை தவழும்! இருளைப் பகுத்து வைத்தால் போன்று சோலைகள் விரிந்து காணும்; இத்தகைய வளம் உடைய ஊரைப் பற்றிக்கொள்ளும் ஆசையால் காரியின் வலிமையை அறியாத அரசர்கள் சிலர் முற்றுகை இட்டுச் சுற்றி வளைத்தனர். போரெனப் பொங்கி எழும் வீர மறவரையுடைய காரி, காரி எனும் குதிரைமேல் ஏறினான்! காற்றெனக் கடுகி னான்; வேல் தூக்கி விளையாடினான்; பகைவர் படைக் கலங்கள் பார்மேல் குவிந்துவிட்டன. பகைவர் பஞ்சு பறப்பதுபோல் புறங்காட்டி ஓடி ஒளிந்து கொண்டனர். காரியை எதிர்து வந்த கயமையை நினைத்துக் கலங்கினர். அவர்கள் போன திசை தெரியவில்லை!
ஒரு சமயம், பெருநற்கிள்ளி என்னும் சோழவேந்தனும், மாந்தரஞ்சேரல் இரும் பொறை என்னும் சேரவேந்தனும் பகை கொண்டு போருக்கெழுந்தனர். சோழன் காரியின் துணையை நாடி நின்றான். காரியும் துணையாகச் சென்று களம் புகுந்தான்! பின்னர் வெற்றி தோல்வி பற்றிக் கேட்க வேண்டுமா? சோழன் வென்றான்; சேரன் தோற்றான்! இல்லை இல்லை! காரியால் சோழன் வென்றான்! காரியாலேயே சேரன் தோற்றான்! இதுதானே உண்மை!
கொல்லிமலைக் கொற்றவனான ஓரியைக் காரி ஒரு சமயம் களத்திலே சந்தித்தான். வில் வீரனான ஓரியையும் எளிதில் விட்டு விடவில்லை காரி. தன் வலிமையை எல்லாம் ஒன்று கூட்டித் தாக்கி ஒழித்துவிட்டே மீண்டான் காரி! அந்தோ! நல்லவர் களையெல்லாம் நச்சுருவமாக்கும் போர்வெறி என்றுதான் ஒழியுமோ?
ய
கிள்ளிவளவன் என்னும் சோழவேந்தனுக்கும் மலைய மான் காரிக்கும் நெடுநாட்களாக உட்பகை இருந்துவந்தது. அவ்வுட்பகை புறப்பகையாகவும் மாறிக்கொழுந்துவிட்டு எரிந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் அழித்துவிட முந்தி நின்றனர். அவர்கள் கோப நெருப்பால் மூங்கில் காடு அழிந்து படுவதுபோல வீரர்