உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும் புலவர் மூவர்

323

பரிசோதனைப்பணி) ஆகிய தொழில்களையும் கொண்டு வருவாய் பெற்றதுடன் புலமைத் திறமும் நடாத்தினார். இவ் வாறு வாழ்ந்தோருள்ளும் சிலருக்கு இவர் தம் வருவாய் குறைந்து வறுமைப்பட வேண்டிய நிலைமையும் ஏற்பட்டதுண்டு.

ஓர் ஐய எண்ணம்

66

பொருளே குறியென வாழ்பவருடன் தொண்டு புரியும் உள்ளத்தினர் போட்டி போட முடியாது. அப்படியே ஏதோ போட்டியின்றிப் பெற்ற பொருளையும் தம் நலமே குறியாகப் போற்றிவாழும் தன்மையும் இவர்களிடத்து இல்லை. இக் காரணங்களால் சொல்லொணா வறுமைக்கு ஆளாயினர். வள்ளல்களிடத்தும் அரசர்களிடத்தும் சென்று பொருள் பெற்று வந்து தம் தொண்டினைச் செய்ய வேண்டுபவராயினர். 'பிறரிடம் சென்று இரந்து ஏற்று வாழ்வது இழிவு அல்லவோ! புலமை நலம் படைத்தோர்" வாழ்நாளெல்லாம் பொருள் தருவாரைப் புகழ்ந்து பேசிப் பரிசு பெற்று வாழ்ந்து வந்தனரே! உழைக்க மாட்டாது சோம்பராய் வாழ்க்கை நடத்திய இவர்கள் பிழைக்கும் வழியொன்று கண்டிலரோ? பாவலர் நாவலர் என்ற பெயர் பெற்றுப் பயன் யாது? என்று இன்ன L பலவாறாய் எண்ணுவதாயினும், உரைப்பதாயினும், அது அவ்வவர்களது அறியாமை ஒன்றனையுமே காட்டுவதாகும். புலவன் தொண்டு

புலவன் வாழ்க்கை உலகநலம் கனிந்த வாழ்க்கை; பரந்த நலம் கனிந்த வாழ்க்கை. உழைத்தவன் உழைப்புக்கு ஏற்ப ஊதியம் பெறுகின்றான். ஊதியம் கிடைக்காவிடின் அன்புமுறையிலோ, வன்புமுறையிலோ ஊதியம் பெற்றே தீருகின்றான். அதற்கும் பயனில்லை என்றால் தொழிலுக்குப் போவதை நிறுத்திக் கொள்கிறான்.

ஆனால் ள்ளத்தை உயர்வுடையதாக்கி, அறிவு ஆராய்ச்சியைப் பெருக்கி மனிதரை மனிதராய் ஆக்கும் புலவன் புலமைத்தொண்டு ஆற்றுகின்றான். உயிரை உடலோடு ஒட்டிக் கொண்டு இருக்கச் செய்ய அதுவும் தமக்கு மட்டுமின்றித் தம் சுற்றமும் ஊரும் உய்ய - உழைக்கின்றான். அன்பளிப்புக் கிடைத்தால் நன்றி செலுத்துதலுடன் பெறுகின்றான். இல்லை யென்றால் வாழ்த்திவிட்டு விடை பெறுகின்றான். எது எவ்வா றாயினும் தன் தொண்டினை மட்டும் அவன் விடுவது இல்லை.