பெரும் புலவர் மூவர்
325
இவர்களனைவரும் என்ன பயனைக் கருதி வெயிலென்றும், மழையென்றும், இரவென்றும் பகலென்றும், மேடென்றும் பள்ளமென்றும், கல்லென்றும் முள்ளென்றும், பகையென்றும், நட்பென்றும் பாராது பணி புரிந்தனர்?
இவர்களுக்கும் வயிறு உண்டு! மனைவி மக்கள் உண்டு; சுற்றம் சூழல் உண்டு; நம்மைப் போல் அனைத்தும் உண்டு. உலகம் வாழ வாழ்ந்த இவர்கள், உலகைக் காத்துதவ வேண்டுவதே கடனாகக் கொண்ட காவலனிடமோ, வள்ளலிடமோ பரிசு பெற்று வாழும் வாழ்வு குறைவுடையதன்று என்பது தெளி வாகும். அன்றியும் உலகம் வாழ்தற்காகவே, அவர்கள் பரிசினைப் பெற்று வந்து தாமும் வாழுகின்றனர். இதுவும் பரந்த பண்பின் விளைவேதான்.
வேண்டுகோள்
இக்கண்ணோட்டத்துடன் முப்பெரும் புலவர் வாழ்வை யும் உற்று உணர்வோமாயின் உண்மையிலேயே இவர்கள் செய்த தொண்டு உலகம் உள்ளளவும் உலகத்தார் உள்ளத்தி லிருந்து அகற்ற முடியாத உயர் பெருந்தொண்டாக இருக்கும். இனி, இம் முப்பெரும் புலவர்களின் ஒப்புடைத் தன்மைகள் சிலவற்றை இங்கே காண்போம்:
முப்பெரும் புலவர்கள்
க
நாம் இந்நூலில் அறியும் பெரும்புலவர்கள் மூவர் ஆவர். அவர்களுள் ஒருவர் பெருஞ்சித்திரனார்; மற்றொருவர் பெருந்தலைச் சாத்தனார். இன்னொருவர் பெருங்குன்றூர் கிழார். இம்மூன்று புலவர்களும் முறையே பெயருக்கும், ஊருக்கும் முன்னர் ‘பெரும்' என்னும் அடைச் சிறப்புப் பெற்று விளங்கினர். ஆயினும் ஒருவரினும் ஒருவர் குறையாத அளவில் அருந்தகைமையும், ஆற்றலும் பெற்று விளங்கினர் என்பதை இவர்தம் பாக்களால் அறியலாம்.
கல்வி
மூன்று
புலவர்களும்
ளமைப் பருவத்திலேயே கற்க வேண்டுவனவற்றைக் கற்றனர்; பிறருக்கும் கல்வி கற்பித் தனர்; கற்றபடியே வாழ்ந்து காட்டினர்; கவிபாடும் திறமையை இயல்பாகப் பெற்றனர்; மண் குடிசை முதல் மன்னவன் மாளிகை வரைத் தம் புலமையைப் பரப்பினர்; நிலைத்த புகழுக்குரியதான