உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும் புலவர் மூவர்

327

சேரல் இரும்பொறையினிடத்தும் பாடிச் சென்று பரிசின்றி மீண்டனர். எனினும் செய்யாத செயல் செய்தோ, சொல்லாத சொல் சொல்லியோ தம் மானத்திற்குக் குறைவு உண்டாக்கிக் கொண்டாரல்லர். 'வாழ்க' என்று வாழ்த்தியே மீண்டனர். பின்னர் சித்திரனாருக்கும் சாத்தனாருக்கும் குமணனும், கிழாருக்கு இளஞ்சேட் சென்னியும், இளஞ்சேரல் இரும்பொறையும் பெரும் பொருள் கொடுக்கத்., தாமே வைத்துக் கொள்ளாது 'ஊருணி' போல அனைவருக்கும் பயன்பட நின்றனர்.

உயரிய கோட்பாடு

எப்படியோ வாழ்ந்தால் போதும் என்னும் கீழ்மனம் இம்முப் புலவர்களிடத்தும் இருந்ததே இல்லை. ஈயாதவன் வெட்கமடையுமாறு யானைப் பரிசு தந்த பெருமை சித்திர னாருக்கு உண்டு. உடன் பிறந்திருந்தும் உரிமையுடன் ஒன்றி வாழ மறந்த தம்பியை அண்ணனுடன் பிணைத்து வைத்த பெருமை சாத்தனாருக்கு உண்டு. அன்பொத்த இல்வாழ்வின் இடைப் புகுந்த பிணக்கினை அகற்றி இணைந்து இன்புறச் செய்த பெருமை கிழாருக்கு உண்டு. பொது நலம் பேணிய சிறப்பு இம்மூவருக்குமே உண்டு.

நன்றியறிதல்

66

முப்பெரும் புலவர்களிடத்தும் நன்றியறிதல் மிக்கிருந்தது. ‘குமணன் தந்த வளம் இது: எல்லோருக்கும் கொடு” என்று தம் நன்றி அறிதலைக் காட்டினார் சித்திரனார். புலவர்களைப் போற்றி வாழ்ந்த வள்ளல் வழியினனான இளங்கண்டீரக் கோவை மார்புறத் தழுவித் தம் நன்றியறிதலைக் காட்டினார் சாத்தனார். இளஞ்சேரல் இரும்பொறையினிடம் சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியின் நாட்டைப் புகழ்வதால் தம் நன்றியறிதலைக் காட்டினார் கிழார்.

புலவரைப் போற்றும் முன்பு

மூன்று புலவர்களும் முன்னைப் புலவர்கள் மாட்டுத் தணியாத அன்பு வைத்திருந்தனர். அவர்கள் வழியே சென்று தம் புலமையைக் காட்டினர். சித்திரனார் (மோசி பாடிய ஆய்" என்று) ஆய் என்னும் வள்ளலைச் சிறப்பித்துக் கூற நேர்ந்த பொழுது மோசிகீரனாரால் பாடும் புகழ்பெற்ற ஆய் என்று தாம் அப்புலவர் மாட்டுக் கொண்டிருந்த அன்புடைமையை வெளிப்