உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328

இளங்குமரனார் தமிழ்வளம் 5

படுத்தினார். சாத்தனார் "இளவிச்சிக்கோ! நும் பரம்பரையை எம் பரம்பரையினர் பாடாது விட்டனர். ஆதலால் யான் நின்னைத் தழுவிக் கொள்ளேன்” என்று கூறுமுகத்தான் தாம் புலவர்கள் மாட்டுக் கொண்டுள்ள அன்புடைமையை வெளிப் படுத்தினார். கிழார், “கபிலர் பாடிப் பெற்ற ஊர்களினும் நின் பகைவர் நினக்குத் தோற்றுப் போகட்டுச் சென்ற வேல்கள் பல" என்று இளஞ்சேரலினிடம் கூறித் தாம் கபிலர் மாட்டுக் கொண் டுள்ள அன்புடைமையை வெளிப்படுத்தினார்.

சொற் சிறப்பு

தமிழால் வைதாரையும் வாழவைக்கும் தெய்வம் போல, தம்மைப் பேணாத வேந்தரிடத்தும் சினம் கொள்ளாது தம்மையே நொந்து கொண்டு அவர்களை வாழ்த்திய தகைமையும், உயர்பண்புடைய வள்ளல்களிடத்துத் தம் வறுமையினைச் சிலசொற்களால் தெளிவாக உரைத்த பெருமையும் இவர்களது சொற் சிறப்பினைக் காட்டுவனவாம்.

பாமாலைகள்

இம் மூவரும் தொடுத்த பாமாலைகள் தொகை நூல்களில் அமைந்து பொலிவோடு விளங்குகின்றன. சித்திரனார் பாடியன வற்றுள் பத்துப் பாடல்கள் கிடைத்துள்ளன. அவையனைத்தும் புறநானூற்றில் அமைந்து ஒளிவிடுகின்றன. சாத்தனார் பாடியன வற்றுள் ஒன்பது பாடல்கள் கிடைத்துள்ளன. அவற்றுள் ஆறு புறநானூற்றிலும், இரண்டு அகநானூற்றிலும், ஒன்று நற்றிணை

யிலும் சுடர்விடுகின்றன.

கிழார் பாடியனவற்றுள் இருபத்தொரு பாடல்கள் கிடைத் துள்ளன; அவற்றுள் ஐந்து புறநானூற்றிலும் ஒன்று அக நானூற்றிலும், ஒன்று குறுந்தொகையிலும், நான்கு நற்றிணை யிலும், பத்து பதிற்றுப்பத்திலும் மின்னுகின்றன.

தொழில்

சித்திரனார் புலமைத் தொழிலே தொழிலாயும் மற்றை யிருவரும் புலமைத் தொழிலொடு உழவுத் தொழிலையும் பேணி வந்தனர் என்பது உணரக்கிடக்கின்றது.

காலம்

முப்பெரும் புலவர்களும் சங்க காலத்தினர் என்பது இவர் தம் பாடல்கள் தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளமை