பெரும் புலவர் மூவர்
329
யாலும், பாடப்பெற்றுள்ள வேந்தர்கள் வரலாற்றாலும் அறியக் கிடக்கின்றன. சங்க காலம் என்பது இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் ஆகும். இம் மூவருள் பெருங் குன்றூர் கிழார் காலத்தால் முற்பட்டவர்; இவரை அடுத்துப் பெருஞ்சித்திரனாரும் பெருந்தலைச் சாத்தனாரும் வாழ்ந்தவர் என்பது இம்மூவரும் பாடிய கவிகளை யாய்ந்தால் நன்கு விளங்கும்.
பொது
இம்மூவர்தம் வாழ்வும் இலக்கியச் சிறப்பினைப் படைத் திருப்பதுடன், எதிர்காலப் புத்துலகத்தைப் படைக்க விழை வோர் அனைவருக்கும் எழுச்சியை உண்டாக்குவதாகவும் அமைந்துள்ளது. இவர்கள் விரிந்த வர்கள் விரிந்த உள்ளம் உள்ளம் பரந்த கண் ணோட்டத்தை உண்டாக்க உறுதுணையாக நிற்கும்.
படைப்புக் காலம் தொட்டு விளங்கி வரும் பழங்குடியினர் தமிழர் ஆவர். தமிழர்தம் சிறப்புக்குத் தலையாய காரணமாக இருப்பது, அவர்கள் கண்ட இலக்கியமேயாகும். தமிழர் இலக்கியம் தேனாறு பெருக்கெடுத்தாற்போலத் தித்திக்கும் இயல்பினது; முப்பழச் சுவைக்கும் முதிர் சுவையுடையது; ஊன் கலந்து உயிர் கலந்து ஒன்ற வைப்பது; இறந்தகாலத்தையும், நிகழ்காலத்தையும் எடுத்துக்காட்டி எதிர்காலத்தை வாழ வைப்பது; அரசியல் முறையும், ஆய்வியல் தெளிவும் செறிந்தது; கலைநலனும், கடமை யுணர்வும் பின்னியது; உலகெல்லாம் ஒரு குடியாக்கும் உயர்வு உடையது; மனிதன் மனிதனாக வாழ வழிகாட்டும் வனப்பினது.
பொய்யா நாவின் புலவர் பெருமக்கள்
இத்தகைய சீரிய இலக்கியப் படைப்பை ஆக்கிய புலவர் பெருமக்களோ பொய்யாநாவுடையவர்கள்; குற்றம் கண்ட இடத்து இடித்துக் கூறிக் குணம் கண்ட இடத்துப் புகழ்ந்து பாடும் இயல்பினர்! குன்றம் ஒத்த செல்வம் கிடைத்தாலும் குறைபட்ட செயலில் புகாதவர்கள்! அறமே அவர்கள் மொழி. அதுவே அவர்கள் வழி; பாராள்பவனாகவே இருப்பினும் பண் பாட்டுடன் எடுத்துக் கூறத் தவறமாட்டார்கள்! பகைத்துக் கொள்வானே என்று அச்சங் கொண்டு விட்டுச் செல்வதும், ஆமாம்" என்று ஒத்துப் பேசுவதும் அவர்கள் அறியாதவை! பேதமும் பிணக்கும் இல்லாது ஒருங்கு கூடித் தமிழ் வளர்த்த
66