உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330

இளங்குமரனார் தமிழ்வளம் 5

பெருமை அவர்களுக்கு உண்டு! அவர்கள் வளர்த்த தமிழே தங்கத் தமிழாம் சங்கத் தமிழ்!

புலமைக்கொரு பொற்காலம்

சங்க காலத்தே பண்பட்ட புலமையாளர் ஆயிரம் ஆயிரம் பேர் இலங்கினர்; அவர்களுள் அரசப் புலவர்கள் உண்டு; அந்தணப் புலவர்கள் உண்டு; வாணிகம் செய்து வளர்பொருள் ஈட்டிய புலவர்கள் உண்டு; வையகம் தழைக்க உழு தொழில் செய்து வாழ்ந்த உழவப் புலவர்கள் உண்டு; மருத்துவத்துறை கைவந்த மாண்பினரும் இசைத்துறை கனிந்த இயல்பினரும் உண்டு; ஆடவரும் மகளிரும் உண்டு; அரசினரும் அவர் அடியவர்களும் உண்டு; இரவலரும் புரவலரும் பாணரும் கூத்தரும் உண்டு! புலமையின் பொற்காலம் அது.