உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும் புலவர் மூவர்

L

343

திறனில்லாத ஓட்டைச் செவியர் பலர்; உள்ளத்தே செருக்குடைய சிறியர் பலர்; புலமையை விரும்பாப் புல்லர் பலர்; ஆனால் வறண்ட பயிருக்கு வானம் வழங்குவது போல் வழங்கும் வள்ளல்களும் இல்லாமல் இல்லை.

தக்க இடத்தை அறிந்து தம் நிலைமையைக் கூறினால் தகுதி அறிந்து தரும் தாளாளர்களும் உலகில் இல்லாமல் ல்லை. பறம்பின் கோமகன் பாரியும். கொல்லிமலைக் காற்றவன் ஓரியும், மாரிபோலும் ஈகைக் காரியும், குதிரை மலைக் குரிசில் அதியனும், தோகை மயிலுக்குப் போர்வை யளித்த பேகனும், மோசி கீரனாரின் பாடலேற்ற ஆயும், கொள்வோர் விருப்பம் அறிந்து கொடுக்கும் நள்ளியும் ஆகிய வள்ளல்கள் எழுவரும் மாண்ட பின்னர், புலவர்கள் வாழ்க்கை யில் கப்பிக் கொண்ட வறுமையைப் போக்குவதற்காக நிற்கும் ஒரே ஒரு வேந்தன் குமணனே என்பதை அறிவீராக! அவனே, பாடி வருபவரையும், ஆடி வருபவரையும் தகுதியறிந்து பரிசு தந்து பாதுகாக்கின்றான். அவன் தந்த வாழ்வே என் வாழ்வு! சிறிது கொடுக்கும் சிறுமையும், இல்லை என்று கூறும் இழிவும் இல்லாதவன் குமணன். முதிரம் என்னும் மலைக்கு உரியவன். வானைத் தொட நிற்கும் அவனது மலையைப் போன்ற உயர்ந்த உள்ளம் உடையவன்! பளிங்குபோல் காணப்படும் அவனது சுனை நீர் போன்ற இனிய சொல்லுடையவன். அவனிடத்தை நீவிர் அடையின் உம் வறுமை தொலையும்! வளம் மிகப் பெருகும்! இது உறுதி! உறுதி!" என்று கூறிவிட்டு விடைபெற்றுச் சன்றார் வந்த புலவர்! சித்திரனார் செல்லுவதற்கு வழி யொன்று கிடைத்தது கேட்டுப் பெரிதுங் களிப்புற்றார். குமணன்

குமணன் கூர்மையான வேல் உடை யவன் நண்பர்க்கு நண்பன்; பகைவர்க்குப் பகைவன்; அதனால் பாடுவோர் அவனது ஆண்மையையும் அருளையும் ஒருங்குபடுமாறு விளங்கினான். நாட்டு வளப்பத்துடன் அவன் அன்பையும் பாட்டிலே காட்டினார் பாவலர் பலர்!

குமணன் கொடைவளம்

காட்டும்

இத்தகைய குமணனைக் காணுமாறு புலவர் முதிர மலையை நோக்கி நடந்தார். எதிரே வரும் ஒரு கூட்டத்தைக் கண்டார்! அக்கூட்டத்தினர் அனைவரும் புலவரும், பாணரும், கூத்தரும் ஆவர்! அவர்களைக் கண்டவுடன் உள்ளம் மகிழ்ந்தார்