உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344

இளங்குமரனார் தமிழ்வளம்

5

புலவர் சித்திரனார். முகமலர்ச்சியுடன் அளவளாவினார். அவர்கள் சித்திரனார் இருக்கும் நிலைமையைச் சிந்தையில் கொண்டனர். தாங்கள் குமணனைக் கண்டதையும், அவன் செய்த செயற்கரிய உதவியையும் இப்புலவரிடம் உரைப்பது நலமெனக் கருதினர். “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்னும் எண்ண முதிர்ச்சியும் “எல்லா உயிரும் இன்புற்றிருக்க நினைவதுவே அல்லாமல்" வேறொன்று அறியாத பெரு நோக்கும் உடையவர்கள் அப்புலவர்கள்! அதனால் சித்திர னாருக்கு உரைப்பாராயினர்.

நல்லோர் கூறிய நயவுரை

"புலவர் பெரும! வெப்பமிக்க கதிர் எரித்தலால் கரிந்த புல்வெளிபோல இருந்த எமக்கு இடி இடித்து மின்னல் மின்னி மழை பொழிந்தது ஒரு முகில். அம் முகிலை அறிவீரோ நீவிர்! அம்முகில் முதிரமலையிலே கொடைக் கைகள் இரண்டுடன் விளங்குகின்றது. அந்த முகிலைக் காணுமுன் எங்களைப் பசி தின்று கொண்டு இருந்தது. ஆனால் சோறு கண்டறியாத எங்களை அன்புடன் வரவேற்று, இன்புரை கூறி, நண்பரினும் நண்பராகப் போற்றித் தன்னொடும் இருக்கச் செய்து உணவு அளித்தது! உணவும் எத்தகையது?

நெய்ச்சோறு! தாளிப்புக் கறிகள்! ஊட்டமிக்க துவையல்! தண்மதி போலாகத் திகழும் உண்கலம்! விண்மீன்கள் போலாகச் சூழவைத்த பொற் கிண்ணங்கள்! வாடிச் சுருங்கிய வயிற்றை எடுப்பாக்கக் கூடிய சுவை! பிறிதொருவனைத் தேடிச் சென்று தேம்ப வேண்டாதவாறு பெருகிய பொருட்கொடை! இவ் வளவும் தரும் முகில்தான் முதிரத்து முகில்!

அம்முகிலின் பெயர் குமணன் என்பது! நீவிரும் அங்குச் செல்க! பெரும் பொருள் பெற்று வருக! செல்லும் வழியும் துவே!" வே!” என்று சுட்டிக் காட்டி விட்டு நடந்தனர். சித்திரனார் அவர்களுக்கு நன்றி கூறி விடை பெற்றுக் கொண்டார் குமணனை நினைத்துக் கொண்டே முதிர மலையையடைந்தார்.

தகுதி அறிந்து தருக

குமணன் சித்திரனார் வருகையை அறிந்து எதிர்கொண்ட ழைத்தான். புன்முறுவல் காட்டி வாழ்த்துரை வழங்கினான். புலவரின் களைப்புப் போகுமாறு அகம் குழையத் தழுவி, நல்லுணவு நல்கினான். நண்பரினும் நண்பராக வைத்துப் பெருமை பாராட்டினான்.