பெரும் புலவர் மூவர்
345
முன்னர் தாம் வரும் வழியில் புலவர்களும் பாணரும் கூத்தரும் கூறிய கூறிய அனைத்தும் உண்மையாக இருத்தலை உணர்ந்து உவகை கொண்டார். ஆனாலும் அதியமானையும், இளவெளிமானையும் மறந்துவிட வில்லை. அவர்களைப் போல இவன் தன்மை இருக்க முடியாது என்று எண்ணினார். ஒரு சமயம் அவர்களைப் போலவே இவனும் நடந்து கொண்டால்? எவர் கண்டார்? ஆதலால் காரியம் கெட்டுவிடும் முன்னாகவே தம் கருத்தினைத் தெளிவுபடக் கூறிவிடுவது தக்கது எனக் கருதினார் அதனால் “இரவலர் போற்றும் புரவல! உன் புகழைப் பாடி வருபவரும் பிறரும் கூறக் கேட்டு உன்னை நாடி வந்தேன். காடை வள்ளல் எழுவரும் மாய்ந்த பிறகு இரவலர் துயரத்தைப் போக்குபவன் நீ ஒருவனே என்ற உரையினைக் கேட்ட பின்னரே இங்கடைந்தேன். யான் எத்தகைய வறுமை உடையவனாக இருந்தாலும் முறைகெட வரும் பொருளைக் கொள்ளமாட்டேன் நீ மனம் கசந்து யானையையே பரிசாகக் கொடுத்தாலும் அதைக் கொள்ளேன். ஆனால் விருப்பம் மிகுந்து இனிய முகத்துடன் ஒரு குன்றிமணியளவான செல்வத்தையே தருவாய் எனினும் கொள்வேன். ஆதலால் புலவன் தகுதி அறிந்தும், உன் தகுதி அறிந்தும், தரும் பொருளையே விரும்பு கின்றேன். தக்கதைச் செய்வாயாக! என்று வேண் ண்டிக்
கொண்டார்.
குடும்ப நிலையைக் குறிப்பிடுதல்
குமணன் புலவர் சொல்லுக்குச் செவிசாய்த்தான் அவரது உள்ளத் திண்மையைப் பாராட்டிப் பேசினான். தன்னொடும் ஒருங்கிருக்கச் செய்து, அவர் வரலாறு அனைத்தையும் தெளி வாகக் கேட்டறிந்தான் குமணன் நல்லியல்பினை அறிந்து கொண்ட புலவர் தம் வீட்டு வறுமைக் கோலத்தை உள்ளது ஒழியாது தெள்ளிதில் விளக்கினார். குமணன் காட்டிய அன்பே இவ்வாறு குடும்ப நிலைமையைச் சொல்லுமாறு ஏவியது.
முற்றம் வரைக்கும் கூட நடந்து செல்ல முடியாதவாறு முதிர்ந்துவிட்ட தாய் நிலைமையையும், மக்கள் மனைவி நிலைமையையும் எடுத்துக் கூறினார். புலவருக்கு ஏற்பட்டுள்ள வறுமையினைக் கேட்டறிந்த குமணன் அவரை மிகமிகப் பேணினான். அன்பு பெருக உறவாடினான். ஆனால் புலவர் மனம் குமணன் தந்த உணவிலும் செய்த வாய்ப்பிலும் செல்ல வில்லை. 'விரைவில் வீடு சேரவேண்டும்' என்றே கருதியது. அதனால் குமணனுடன் தனித்துப் பேசிக் கொண்டிருந்த