20
இளங்குமரனார் தமிழ்வளம்
―
5
வெறுப்புக்கொண்டார். அரண்மனையை விட்டும் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறினார். தன் உள்ளக் கருத்தை உரைக் காமல் செல்லவும் அவருக்கு மனமில்லை, அதனால் வாயில் காவலனை அழைத்தார். “வாயில் காவலனே! வாயில் காவலனே! வள்ளன்மை இல்லாதவனது அடையாத வாயிலைக் காக்கும் காவலனே! அதியமான் நெடுமான் அஞ்சி தன் தரம் அறியானோ? அன்றி என் தரமும் அறியானோ? கொடையாளர் அனைவரும் ஒரு சேர உலகில் இறந்துவிட்டார்கள் இல்லையே! இன்னும் எத்திசைக்கு யான் சென்றாலும் சோறு இடுவார் உண்டு. என் இசைக் கருவிகளை எடுத்துக் கொண்டேன்; மூட்டைகளைக் கட்டிக் கொண்டேன்; புறப்படுகின்றேன்” என்று சொல்லிவிட்டு நடந்தார்.
ள
அரசனுடைய அன்புக்குரிய புலவர் இவ்வாறு வெறுத்துப் போவதை அறிந்த வாயில் காவலன் ஓடோடிப்போய் அரச னிடம் உரைத்தான். ஒன்றை நினைக்க அது ஒழிந்து ஒன்றாவது கண்ட அதியன் விரைந்து சென்று ஒளவையாரை அழைத்து வந்து பெரும் பொருள் கொடுத்தான். மன்னிக்குமாறும் வேண்டிக்கொண்டான். பரிசில் கொடுக்கத் தாமதித்தமைக் குரிய காரணத்தையும் தெரிவித்தான்.
ஒளவையாருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. தான் அவசரப்பட்டு அதியமானை வெறுத்து வெளியேறி யமைக்காக வருந்தினர். அவர் கொடைச் சிறப்பு இத்தகையது என்று பாராட்டினார். "ஒரு நாள் அல்ல, இரு நாள் அல்ல, பல நாட்கள் பலரோடு தொடர்ந்து சென்றாலும் முதல் நாள் போன்று கொடுக்கும் உயர்குணத்தினன் அதியன்” என்று வாழ்த்தினார்.
யாடச்
இது இவ்வாறு இருக்க, அதியமான் ஒரு நாள் வேட்டை சென்றான். அவன் சென்ற இடம் பெரிய மலைப்பகுதியாகும். அம்மலைப்பகுதியின் பிளவு ஒன்றிலே அரிய நெல்லி மரம் ஒன்று இருப்பதாகவும், அதன் கனி, தன்னை உண்டோரை நடுங்காலம் வாழச் செய்ய வல்லது என்றும் முன்னரே அறிந் திருந்தான். அந்நினைவு வரப்பெற்ற அதியன் வேட்டை ஆடு தலையும் விட்டுவிட்டு நெல்லி மரத்தைத் தேடி அலைந்தான். கண்டும் விட்டான்! ஆனால் சிறிய சிறிய இலைகளால் மிக நெருங்கிச் செறிந்திருந்த அம் மரத்தில் கனியைக் கண்டுபிடிப்பது அரிதாக இருந்தது. அரிதில் தேடி, பெரிதில் முயன்று கனி ஒன்றைப் பறித்தான். கனி கையில் வந்தவுடன் எண்ணங்கள் பலவாகக் கிளம்பின.