உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

புறநானூற்றுக் கதைகள்

21

'கிடைத்ததற்கு அரிய கனி இது; உண்டால் நெடுங்காலம் வாழலாம்; ஐயமில்லை. ஆனால் நான் உண்டதனால் ஏற்படக் கூடிய பயன்தான் என்ன? வேண்டுமானால் இன்னும் சில ஆண்டுகள் நாட்டை ஆளலாம். அந்நெடுங்காலத்தில் நன்மையும் செய்யலாம்; அன்றி, கேடே செய்யினும் செய்யலாம். செங் கோலன் என்ற சிறப்புப் பெறலாம்; இன்றேல் கொடுங்கோலன் என்ற இழிவும் பெறலாம். அரச வாழ்வு நன்மை ஒன்று புரியும் வாழ்வு அன்று. ஆனால் புலவர் வாழ்க்கையோ, பிறருக்குத் தீமையறியாதது; சென்ற இடங்களிலெல்லாம் நன்னெறி பரப்பி வருவது. உலகத் தீமைகளை நாவென்னும் படைக்கருவி யாலேயே ஒழித்து வெற்றி காண்பது; தான் கண்ட இன்பப் பொருளைப் பிறருக்கும் பகுத்தளித்து இன்புறுவது; ஆதலால் உயர்ந்த வாழ்வுடைய புலவர் பெருமாட்டியான ஒளவை நெல்லிக்கனி உண்டு நெடுங்காலம் வாழ்வதே நலம் தரும்" என்று எண்ணினான். நெல்லிக் கனியின் சிறப்பை வெளிப்படையாகக் கூறினால் ஔவையார் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று நினைத்து ஒன்றும் சொல்லாமலே மற்றைப் பழத்தோடு பழமாகச் சேர்த்துக் கொடுத்து விட்டான். அதியமான் நெல்லிக் கனியையா ஔவைக்குத் தந்தான்; தன் உயரிய வாழ்வை வ அல்லவோ தந்து தன் மாறா அன்பைக் காட்டினான்! இத்தகைய காவலனைக் காணக் கிடைக்குமோ?

ந்

நெல்லிக்கனியை உண்டார் ஒளவையார்!அதன் தீஞ்சுவை அவரை வியப்பில் ஆழ்த்தியது. அதைப் போலொரு கனியைக் கண்டதும் இல்லை; கேட்டதும் இல்லை; ஆகையால் அதியனை வற்புறுத்திக் கேட்டறிந்து உண்மையை உணர்ந்தார். தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த அதியன் பேரன்பிலே மூழ்கினார். நஞ்சுண்டும் சாவாத கறைமிடற்றுப் பிறைநுதல் அண்ணல் போல நீ நெடிது வாழ்க! “என்று வாழ்த்தினார். அதியன் நெல்லிக் கனியால் ஔவையாரை நெடிது வாழச் செய்தான். ஔவையாரோ தம் வாழ்த்துரையின் வாயிலாய் அதியனை நீடுவாழச் செய்து விட்டார்.

அதியமான் கொங்கு நாட்டை ஆண்டு வந்தபொழுது காஞ்சிமா நகரைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டைத் தொண்டைமான் என்னும் ஓர் அரசன் ஆண்டு வந்தான். அவன் கவிப்புலமையும் அறிவு நுண்மையும் பெருகக் கொண்டிருந்தான். அவனுக்குப் படைபலமும் அரண்வளமும் வாய்த்து இருந்தன. கலைவழியிலே தன் பொழுதைப் போக்கிய