உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356

வள்ளல் நள்ளி

இளங்குமரனார் தமிழ்வளம் 5

அந்நாளில் தோட்டி என்னும் மலையும் அதனைச் சார்ந்த நாடும் கண்டீர நாடு என்னும் பெயரால் அழைக்கப் பெற்று வந்தது. அந்நாட்டின் வேந்தன் வள்ளல் எழுவருள் ஒருவனான நள்ளியாவன்! இந்நள்ளியை மக்கள் கண்டீரக் கோப்பெரு நள்ளி என்று இடத்தொடு பெயரும் சேர்த்து அழைத்தனர். வன் தம்பியாகவும் இளவரசனாகவும் இருந்தவன் இளங் கண்டீரக்கோ என்பவன் ஆவன். நள்ளியின் காலம் முடிந்தபின் இளங் கண்டீரக்கோ ஆண்டு வந்தான்! அவன் புகழ் கேட் டறிந்த சாத்தனார் அவன் அரசு புரிந்து வரும் தோட்டி மலையை அடைந்தார்.

இளங் கண்டீரக்கோ

இளங் கண்டீரக்கோ வள்ளல்கள் வழி வந்தவன்; பாடி வருபவர் பசிப்பிணி நீங்க உவந்து ஈயும் வண்மையாளனான நள்ளியின் உடன் பிறந்தவன். ஆடவர் அயலிடம் சென்ற பொழுதும் இரவலர்வரின் அவர் தகுதியும், தம் வளமும் தோன்ற ஆடவர்களுக்கு ஒப்பாகப் பரிசு வழங்கும் பெருங்குணம் படைத்த கற்பிற் சிறந்த நற்பெண்டிர் நிறைந்து வாழும் நாடாளும் புகழாளன்; ஆதலால் புலவர் மனம் அவனிடத்துச் சென்றது சாலவும் தகுதியுடையதே!

இருவர் வேந்தர்

இளங்கண்டீரக்கோவின் பெருமனையை அடைந்த புலவர் அங்கே இளவிச்சிக்கோ என்னும் வேந்தனையும் கண்டார். இவ்விள விச்சிக்கோ விச்சி நாடாண்ட விச்சி என்னும் வேந்த னின் தம்பியாவான். இளங்கண்டீரக் கோவின்மேல் வைத்திருந்த அன்புப் பெருக்காலே தான் கண்டீரக்கோவின் மனை தேடி வந்து உரையாடி அகமகிழ்ந்து இருந்தான். இவரின் நட்புடை மையைக் கண்ட சாத்தனார் மகிழ்ச்சி கொண்டார். ஆயினும் இளவிச்சிக்கோவின் மாட்டுத் தம் அன்பைக் காட்டும் படியான சொல்லோ செயலோ எதுவும் செய்தார் இல்லை. ஆனால் இளங்கண்டீரக் கோவை நெருங்கி மார்புறத் தழுவிக் கொண்டு மகிழ்வுற்றார். புலவர்செயல் இளங்கண்டீரக் கோவுக்கு வியப்பாக இருந்தது; இளவிச்சிக் கோவுக்கு வேதனையாக இருந்தது. ஆனாலும் இளவிச்சிக்கோ அறிவு நுட்பமும் அமைந்த பண்பும் உடையவன் ஆதலால் “புலவர் செயலுக்கு ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும்" என்று கருதினான்.