உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360

புரவலர் இரவலர்

இளங்குமரனார் தமிழ்வளம் 5

மேகம் கடலில் நீரள்ளிக் கொண்டு மீள்வது போலப் புலவர்கள் யானை பெற்றே மீள்வர் என்று சாத்தனார் வற்புறுத்தும் அழகு பாராட்டற் குரியதாம். மேகம் காலத்தைக் கருதிக் காத்துக் கிடக்குமா? அள்ளிச் செல்ல அனுமதி வேண்டிக் கிடக்குமா? அள்ளிச் செல்வது அதன் இயற்கை! அதற்கு இடம் தந்து இன்புறுத்தி அனுப்புவது கடலின் இயற்கை! மேகமும் வேண்டும்; கடலும் வேண்டும்; இரண்டும் ஒன்றை ஒன்று பிரிக்கமுடியாத அளவுக்கு வேண்டும்.

புரவலரும் வேண்டும், இரவலரும் வேண்டும்; இரப்பவர் இல்லாயின் இவ்வுலக இவ்வுலக வாழ்க்கை மரப்பாவை வாழ்க்கை போலாகவே போய்விடும் என்பதல்லவா பொய்யாமொழிப் புலவர் பொருளுரை? புலவர்கள் அறநெறி காட்ட வேண்டும், அரசர்கள் பொருளுதவி புரிய வேண்டும்; இது இவ்விரு சாரார்க்கும் நலம் பயப்பதுடன் உலகுக்கும் இன்பம் பயப்பது. மேகம் கடலில் நீரள்ளி நீரள்ளிவந்து நிலத்துக் கொட்டுவதால் உலகமல்லவா வாழுகின்றது? உயிர்கள் அல்லவா வாழுகின்றன? புலவனுக்குத்தரும் கெடையால் அவன் மட்டுமோ வாழுகின்றான் உலகத்தை அல்லவா வாழ வைக்கின்றான்? இல்லையேல் L மனைவியை நோக்கி, என்னைக் கேட்காமலே எண்ணிப் பாராமலே எல்லோருக்கும் கொடு' என்று கூறுவானோ? இந்நெறிக்கு விலக்கு ஆகாத சாத்தனார் தம் எண்ணத்தை எல்லாம் வடித்து எடுத்தாற்போல,

66

66

கடல்வயிற் குழீஇய அண்ணலங் கொண்மூ நீரின்று பெயரா வாங்கு”

என்றார். புலவர் வாக்கினைக் கேட்ட வேட்டுவன் புத்துணர்ச்சி பெற்றவனாய்த் தன்னை மன்னிக்குமாறு வேண்டிக் கொண்டு அவரைப் பேணிச் சில நாள்கள் இருக்கச் செய்து அனுப்பு வித்தான்!

மூவன்

கடிய நெடு வேட்டுவனை நீங்கிய சாத்தனார் மூவன் என்னும் வேந்தனைக் கண்டார். மூவன் கடற்கரை நாட்டு வேந்தன். அவனது நாடு வளப்பம் மிகக் கொண்டது. பொய்கையிலே விரும்பிய இரையை உண்ட நாரை எத்தகைய கவலையுமின்றி நெற்போரின் கண்ணே உறங்கும்! நெற்கதிரை