பெரும் புலவர் மூவர்
361
அரியும் உழவர் ஆம்பல் இலையில் இனிய மதுவினை ஊற்றி இன்புறப் பருகுவர்! வேலை முடிந்த பின்னர் ஆரவாரிக்கும் கடலிலே படிந்து எழுந்து அவர்களும் ஆரவாரித்து மகிழ்வர்! அவர்கள் ஆட்டத்திற்கு ஏற்பக் கடலலைகள் தாளம் போடும்..
இத்தகைய வளப்பங்களைக் கொண்டது மூவனது நெய்தல் நாடாகும். இதனால் நாட்டிலே வளப்பமும், மக்கள் வாழ்விலே களிப்பும் மிகுந்திருந்தமை நாடறிந்த உண்மையாயிற்று. இவ்வுண்மையைச் சாத்தனாரும் அறிந்துதான் மூவனைத் தேடி ஆவலுடன் வந்தார்.
ஓட்டைச் செவி
நாட்டில் வளமை இருந்தது புலவருக்குத் தென் பட்டது. ஆனால் மூவனது உள்ளத்தில் வளமை இல்லை என்பதும் எளிதில் அவருக்குப் புலனாயிற்று. இருந்தாலும் பொறுத்துப் பார்த்தார். தேடி வந்த தம்மைப் பேணி அனுப்புவிக்காது நாட்கடத்திக் கொண்டுவரும் அவன் செயல் புலவரைத் துன் புறுத்திற்று! கொடுக்காது அமைந்து இருக்கும் வேந்தனைத், தம் வறுமை நிலையைக் கேட்டும் ஓட்டைச் செவியனாய் இருக்கும் காவலனை அடுத்திருந்து மேலும் பொழுது போக்க புலவருக்கு மனம் வரவில்லை. அதனால் வழக்கம் போலவே மூவனை விட்டுப் பிரிவதே தமக்குத் தகுதி எனக் கருதினார். அதனால் "வேந்தே! நீ யாவரும் விரும்புமாறு உள்ளாய் என்று கேள்விப் பட்டேன். அக்கேள்வி என்னைத் தள்ளிக் கொண்டு வந்து உன் முன்னர் நிறுத்திற்று. பழம் கிடைக்கும் என்று பேராசைப்பட்ட பறவை வான வெளியிலே கிளம்பிப் பறந்து வந்து மரத்தைச் சேர்ந்தபோது, அம்மரம் பழுத்து மாறியது கண்டு ஏமாற்ற முற்றுச் செல்வது போல நின்னைத் தேடி வந்த நானும் பரிசு கிடைக்காது ஏமாற்றுமுற்றுச் செல்கின்றேன். ஆனால் தற்காக வருந்துகின்றேன் இல்லை.
வ
நீ நோயில்லாது வாழ்வாயாக! உன்னை இவ்வாறு வாழ்த்துவதுடன் உன்னிடம் வேண்டிக் கொள்வதும் ஒன்றுண்டு!
பொழுது உன்னை இரந்து வந்து ஒன்றும் பெறாது செல்லும் இந் நிகழ்ச்சி உனக்குப் பெருமை தருவது இல்லை; எனக்கும் பெருமை தருவது இல்லை. ஆதலால் இது நாம் அறிந்து கொண்ட அளவுடனே இருக்கட்டும். இதுவே யான் உன்னிடம் வேண்டிக் கொள்வது” என்று எழுச்சி மிக்க நடையுடன் வெளியேறினார்.
ன்