மிக்க
புறநானூற்றுக் கதைகள்
-
23
ன்
படைக்கலங்கள் எவ்வளவு பெரிய இடத்தே - அதுவும் காவல் இடத்தே இருக்கின்றன! இவற்றை நீ அடுக்கி வைத்திருக்கும் அழகுதான் என்னே! மயில் தோகையுடன் விளங்குபவை; மாலையுடன் திகழ்பவை; வைரப்பிடியுடன் பொலிபவை; எண்ணெய்ப்பதம் வாடாதவை; ஆ! ஆ! எத்தகைய அழகு! ஏதேனும் மாசு மறு உண்டா? களங்கம் கறை உண்டா? எதுவும் இல்லையே! உன் படைக்கலம் இவ்வாறு இருக்க, அதியன் படைக்கலங்கள் எப்படிக்கிடக்கின்றன என்று கேள்! பக்கங்கள் சிதைந்துவிட்டன; மாலையோ தோகையோ சூட்டப் படவில்லை; நெய் பூசப் படவும் இல்லை; ஓயாமல் போர்க்களம் போர்க்களம் என்றே சென்று கொல்லன் உலைக்கூடமே தஞ்ச மாகக் கிடக்கின்றன. கொல்லன் உலைக்கூடம் இவ்வளவு பரந்த இடத்தை உடையதா? கட்டுக்காவல் உடையதா? சின்னஞ் சிறு குடில்; பேணிக் காப்பாரற்ற நிலை" என்றார். தொண்டைமான் தலை சுற்றியது. ஔவையார், தன்படையைப் புகழ்வதுபோலப் போர்க்களத்திற்குப் போய் அறியாதவை என்று இகழ்ந்தும், அதியமான் கருவிகளை இகழ்வது போலப் போர்க்களத்திலேயே பழக்கப்படுபவை என்று புகழ்ந்தும் கூறியதை அறிந்தான். எனினும் பழைய செருக்கு மாறிவிடவில்லை. வீரர்களை வரிசை வரிசையாக நடக்கவிட்டும், விளையாட விட்டும், வேடிக்கை பார்த்து மகிழ்ந்தவன் அல்லவா! அதனை மறந்து விடுவானா?
ப
வீரர் சிலரைக் காட்டினான். “போர் இல்லை என்று புலம்பிக் கொண்டு திரியும் இவர்களைப் பார்த்துமா அதிய மானுடைய வீரர்களை உயர்வாகக் கூறுகின்றீர்கள்? “என்றான். ஒளவையார், இவன் வீரர்களைப் பெரிதாக மதித்துள்ளான். உண்மையை யை உணரச் செய்தலான்றி வழிக்கு வரமாட்டான் என்று எண்ணியவராய்ப் பேசினார் "வேந்தே! அடிக்கும் கோலுக்கும் அஞ்சாது எதிர்த்து மீண்டும் அரவம் போன்ற வீரர்கள் உளர். அவ்வீரர்களை முன்னடத்திச் செல்லும் வீரன் தான் எத்தகையன்? கலை நலம் வாய்ந்த தச்சன் ஒருவன் உள்ளான், அவன் நாள் ஒன்றுக்கு எட்டுத் தேர் செய்வான். அத்தச்சன் அருமுயற்சி கொண்டு ஒரு மாத அளவில் ஒரே ஒரு தேர்க்கால் மட்டும் செய்கின்றான். அத் தேர்க்காலின் வலிமை எத்தகையதாக இருக்கும்? அத்தேர்க்கால் போன்றவன் அதிய மான். கூற்றுவனே எதிர்த்தாலும் தோற்றோடச் செய்யும் ஆற்றல் படைத்தவன் அவன் என்பதற்கு ஐயமில்லை. பலபல எண்ணிப் பழுது பட்டுப் போகவேண்டாம்” என்றார். ஔவையார் உரை அருளுரை என்பதுடன் உண்மையுரை என்பதையும் தொண்டை
க