384
இளங்குமரனார் தமிழ்வளம்
―
5
இங்கே! அரசியிங்கே! அரசன் நல்லூரில் வாழ்கின்றான்! ஏன்?” என்று சிந்தித்துக் கொண்டிருந்தார் புலவர். அவரது சிந்தனை கிடையே அம் முதுமகள் “அரசன் நல்லூர் மகள் ஒருத்திமேல் அன்பு கொண்டு அவளே தஞ்சமாகி வாழுகின்றான். மாடமும் மனையும் எழுப்பி அவளொடும் வாழுகின்றான். நாங்கள் இங்கு இருக்கின்றோம்' என்று முடித்தாள்.
'மெல்லிய உள்ளம் படைத்தவராயினும் சிற்சில வழிகளில் கல்லுள்ளம் உடையவராக இருப்பர் போலும். பேகன் போன்ற வர்களும் இத்தகைய இழிதகைமைக்குரியவர்களாக இருப் பார்கள் என்று எப்படி எண்ண முடியும்? அவன் என்ன காரணத் தாலோ தவறிவிட்டான். அதன் காரணத்தை ஆராய்ந்து கொண்டு திரிவதிலே பயன் ஒன்றும் இல்லை. தமிழ் தந்த புலமைவளம் நமக்கு இருக்கவே இருக்கிறது. தமிழ் மாட்டுக் கொண்டுள்ள அவனது அன்பும் இருக்கவே இருக்கிறது. பிரிந்த அவர்களைப் பிணைத்து ஒன்றாக்கும் இனிய தன்மை தமிழுக்குண்டு என்பதைத் தமிழகம் அறியட்டும்! உலகமும் அறியட்டும்! புலவர் தொழில் பிரிந்தவரைப் புணர்ப்பது என்று கூறுவது பெருமையே அன்றிச் சிறுமை தருமோ?” என்று பலவாறாக எண்ணியவராய் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டார். மெல்லியல் உள்ளம்
கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மறைவிடம் சென்ற கண்ணகியார் தோழியர்களை அழைத்துப் புலவரை இருக்கச் செய்து பெருமைப்படுத்துமாறு கூறினார். ஆனால் புலவர் நில்லாமல் போய்விட்டார் என்ற செய்தியினைக் கேள்விப் பட்டவுடன் புண்பட்டார். தலைவன் பிரிவால் வருந்திய வருத்தத் தினும் புலவருக்கு ஒரு வேளை விருந்துகூடச் செய்து அனுப்ப முடியாத அளவுக்குத் தமது நிலைமை ஆகிவிட்டமை கருதி வருந்தினார். “அரசர் இங்கு இருந்திருந்தால் புலவர் போயிருப் பாரோ? அவர் இல்லாமையால் தானே அரிய விருந்தினை இழந்தேன்' என்று புலம்பினார். "புலவரை எவ்வளவோ வற்புறுத்திக் கூறியும் அவர் இங்கிருக்க மறுத்துவிட்டார். ஏதோ பெருஞ் சிந்தனையுடன் போகின்றார். மன்னர் இருக்கும் நல்லூருக்குத் தான் போகின்றார். என்று எங்களுக்குத் தோன்று கிறது” என்றார்கள். “அய்யோ! நல்லூர் சென்றால் இங்கு அவர் கண்டவற்றைச் சொல்லி விடுவாரே" என்று சில முத்துக்களை உதிர்த்துக் கொண்டு இருந்தார் அரசியார்.