உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேகன் கொடை

பெரும் புலவர் மூவர்

385

புலவர் பெருங்குன்றூர் கிழார் மலை பல கடந்தார்! அருவி பல அகன்றார்! இயற்கையை நுணுகி நுணுகி அனுபவிக்கும் புலவர் இப்பொழுது அங்கும் இங்கும் திரும்பிப்பார்க்காதவராய் ஒரே போக்காக நல்லூரை அடைந்தார். அவர் போய்ச் சேர்ந்த பொழுது மாலைப் பொழுது. கையிலே யாழ் வைத்திருந்தார். அவ்யாழ் அழகியதொரு சிறிய யாழாக இருந்தது. மாலைப் பொழுதிற்குரியதான செவ்வழி என்னும் பண்ணை நயமுடன்

மீட்டினார்.

செவ்வழிப்பண் கல்மனத்தையும் கரைக்கும் தன்மையது. புலவர் கண்ணகியார் நிலைமையை நினைத்துக் கொண்டே செவ்வழிப் பண்ணை மீட்டினார். இரக்கம் மிகக்கொண்டான் பேகன். புலவர் எண்ணத்தை நிறைவேற்றி யனுப்ப நினைத்தான். அவர் வறுமைக்கு ஆட்பட்டு வாட்ட முற்றிருக்கும் காட்சி அரசனுக்குத் தெரிந்தது. குழிவிழுந்து பஞ்சடைந்து காணும் புலவர் நிலைமையைத் தெளிவாகத் தெரிந்தான். வறுமை வெருட்டவே ஆங்கு வந்திருப்பதாக முடிவு கட்டிக் கொண்டு ஒன்றும் கேட்காமலே பெரும் பொருள் தந்தான்.

புலவர் வேண்டுதல்

புலவர் பொருளைக் கண்டவுடனே மகிழ்ந்து விடவில்லை. கையை நீட்டி வாங்கி விடவும் இல்லை. மாறாகப் பாடலொன்று பாடினார். ஏன், பாட மட்டுமா செய்தார்? “வேந்தே! இதனைப் படி; படித்து நெஞ்சத்தே நிறுத்து; உன் நெஞ்சம் என்ன சொல்கிறதோஅதைச் செய்துமுடி; நாள் கடத்தாதே! எனக்குப் பரிசு வேண்டும். ஆனால், உன் பொருட் பரிசன்று யான் வேண்டுவது? அருட்பரிசு; அதனை உடனே தா!” என்று கூறிக் கொண்டே பாட்டு எழுதப் பெற்றுள்ள ஏட்டை நீட்டினார்; அவ்வேட்டில்,

66

கன்மழை அருவிப் பன்மலை நீந்திச் சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததைக் கார்வான் இன்னுறை தமியள் கேளா

நெருநல் ஒருசிறைப் புலம்புகொண் டுறையும்

அரிமதர் மழைக்கண் அம்மா வரிவை நெய்யொடு துறந்த மையிருங் கூந்தல் மண்ணுறு மணியின் மாசற மண்ணிப்