உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386

இளங்குமரனார் தமிழ்வளம்

5

புதுமலர் கஞ்ல இன்று பெயரின்

அதுமன்எம் பரிசில் ஆவியர் கோவே!"

என்று எழுதியிருந்தார். அதைப் பேகன் படித்து முடித்தவுடனே, "பேக! நீ உடனே புறப்படுவதே என் பரிசு! உன் மனைவி - மழை ஒலிகேட்டுத் தன்னந் தனியாய் வருந்தி நிற்கும் உன் மனைவி அரிபடர்ந்த கண்களிலிருந்து கண்ணீர் மழை பொழியக் கலங்கி நிற்கும் உன் மனைவி - எண்ணெய் தேய்த்தலை மறந்து, குளித் தலைத் துறந்து, இருக்கும் உன் மனைவி நறுமணநெய் தேய்க்க, பளிங்குநீரில் தோய புதுமலர் சூட நீ இங்கிருந்தும் உடனே புறப்படுவதே என் பரிசு ஆகும்" என்றார்.

புலவர் வழி

66

கிழாருக்குத் தம் இல்லத்து வறுமைக் காட்சி இப்பொழுது தோன்றவில்லை. பேகன் கண்ணகியாரைப் பிரிந்து வாழும் கொடுமை நிலைமையே தோன்றியது. இல்லாது வருந்தும் தம் வாழ்வினும் இருப்பதை மகிழ்வொடு அனுபவிக்க முடியாத நிலைமைக்கு ஆட்பட்ட கண்ணகியார் நிலைமையே இரங்கத் தக்கதாகத் தோன்றியது. ‘ஆடவர்க் கடக்கும் ஆண்மை யுடைய அரசனாயினும் அறத்தின் முன்னர்ப் பணிந்து நிற்கத் தக்கவனே! அதைக் கூறவேண்டுவதும் அமைச்சர், அறிவர் கடனே!” என்னும் தெளிவுடைய கிழார் பிரிந்த கணவன் மனைவியரை ஒன்றுபடுமாறு வேண்டினார். அதுவே தம் பரிசெனவும் புலப்படுத்தினார். அரசர் தம் இல்வாழ்வின் இடையிலும் புகுந்து இன்புறுத்திய பண்டைத் தண்டமிழ்ப் புலவர் வழியே வழி! அவ்வழி வாழ்வதாக!

அருட்புலவர் வாழ்க!

பெருங்குன்றூர் கிழார் மட்டுமோ இத் தூய தொண்டில் முனைந்து நின்றார். கபிலர், வன்பரணர், அரிசில் கிழார் இன்னோரன்ன பொய்யா நாவின் புலவர் மணிகள் முயன்றனர். உள்ளக் கருத்தினைத் தெள்ளிதில் எடுத்துரைத்தனர். நெஞ்சத்தை இளக்கினர். புலவர் பாடும் புகழாளனான பேகன் செவி சாய்த் தான். அவர்கள் வேண்டுதற்படியே தன் அந்தப்புரம் அடைந் தான்? ஆம்! பிரிந்தவர் கூடினர். பெருமகிழ்ச்சி அடைந்தது நாடு; "அருட் புலவர் வாழ்க” என்ற ஒலி திக்கெங்கும் எழுந்தது.

அழியாப் புகழ்

பேகன் தந்த பெருவளத்திணை மறுத்த கிழார் கண்ணகி யாருடன் கூடிவாழும் போழ்திலாவது அடுத்துச் சென்றாரா?