புறநானூற்றுக் கதைகள்
25
வெற்றி வேந்தரை வரவேற்க நாடு நகரெல்லாம் தகடூரில் கூடியிருந்தது. வீரர்களுடன் வேந்தன் பெருமிதத்துடன் சென்றான். அப் பொழுது ஒரு மகிழ்ச்சிமிக்க செய்தியைக் கேட்டான். அச் செய்தியைக் கேட்க ஆண்டுக்கணக்காக ஆசைப்பட்டிருந்தான். ஆனால் ஒரு நாள் தானே ஆகும்? அது என்ன செய்தி?
“அரசே! உமக்கு ஓர் அருமை மைந்தன் பிறந்துள்ளான் என்பதே அச்செய்தி.
வேந்தன் கையிலே வேல் இருந்தது; அதனைக் கீழே போடவில்லை. காலிலே கழல் இருந்தது; அதனைக் கழற்ற வில்லை. உடலிலே வியர்வை இருந்தது; அதைத் துடைக்க வில்லை. கழுத்திலே புண் இருந்தது; அதைப்பற்றிக் கவலைப் படவில்லை. தலையிலே போர்ப்பூ இருந்தது; அதை எடுக்க வில்லை. மைந்தன் பிறந்தான் என்ற மகிழ்ச்சிச் செய்தியால் ஓடினான். வாழ்வை வளப்படுத்த வந்த செல்வத்தைத் தழுவி னான். அப்பொழுதும் பகைவர் மேல் கொண்ட சினம் மாறி விடவில்லை. கண்களிலே இருந்த சிவப்பு நிறம் குறைந்து
வில்லை. ஆண்டு நின்ற அனைவரும் அரசன் தன் மைந்தன் மீது கொண்ட அன்புப் பெருக்கை உணர்ந்தனர். ஒளவையாரும் உணர்ந்தார். புலவர் பெருமாட்டியாம் அவர் தம் திருவாயால் ஒரு பாடல் பாடிச் சிறப்பித்தார். புதல்வன் பொகுட்டெழினி என்னும் பெயருடன் பொலிவோடு வளர்ந்தான்.
காரி அதியமானுக்குத் தோற்றோடினான் அல்லவா! அவன் ஓய்ந்து விடவில்லை. சேர வேந்தனைச் சேர்த்துக் கொண்டு அதியனை எதிர்க்கத் துணிந்தான். அதியனுக்கு நண்பனான ஓரியை முதலில் ஒழிப்பது என்று உறுதி கொண்டான். ஓரிக்குத் துணையாக அதியமான் வந்தே தீர்வான் என்பது அவனுக்குத் தெரியும். அதனால் கொல்லிமலையை முற்றுகை இட்டுத் தாக்கினான். அதியமானும் ஓரிக்கு உதவிபுரிய ஓடோடி வந்தான். சோழ பாண்டியரும் அதியனுடன் வந்தனர். ஆனால் ஓரி களத்தில் இறந்தான் என்ற சொல்லையே அவர்களால் கேட்க முடிந்தது.
ஓரியின் மறைவும், காரியின் கொடுஞ் செயலும் வீரன் அதியனை அதிர்ச்சியடையச் செய்தது. உயிர் நண்பனான ஓரியின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகத் தோன்றியது உலகமே இருண்டு விட்டதுபோல் ஆயிற்று. போர்க்களத்திலே நிற்கின்றோம் என்பதை மறந்தான். பகைவர் தாக்குதல் முதிர்ச்சி