பண்டைத் தமிழ் மன்றங்கள்
415
நெஞ்சம், ஏழையர் துயரை, இரவலர் வறுமையை, இது வேண்டும் என் று வேண்டி வந்தோர் அவலத்தைப் போக்காமல் இருக்குமா? பொழுதெல்லாம் கொடைப் பொழுதாகவே கழித்தான். தன்னிடம் பொருள் பெற்றபோது இரவலர் முகத்தில் தோன்றிய புன்முறுவலையும், களிப்பையும் கண்டு கண்டு இன்புற்றான். “ஈத்துவக்கும் இன்பமே' இன்பமாகக் கொண்ட அவன் புகழ் 'புவி சுருங்கும்' அளவுக்குப் பெருகி வளராதா என்ன?
இனிய இல்லறம்
வள்ளல் பேகனுக்கு அன்புடைய மனைவியாக வாய்த்தவர் கண்ணகியார் அல்லரோ! அவர் திண்ணிய கற்பும், இணையிலா அழகும் வாய்ந்தவர் மனைமாண்பு மிக்கவர்; மறந்தும் பிறர் துயர் காணப் பொறுக்காதவர்; பிறருக்குத் துயரம் ஊட்டுமாறு வாழ்வதைக் கனவிலும் கருதாதவர்; இத்தகு குணக் குன்றாம் கண்ணகியாரும், வள்ளல் பேகனும் கருத்து ஒருமித்து இல்லற வாழ்வினை இனிது நடத்தி வந்தனர். “இல்லறம் என்பது இவ் வாறல்லவோ இருத்தல் வேண்டும்" என்று கண்டோர் பாராட்டி யுரைக்க அவர்கள் இல்லறம் சிறந்து திகழ்ந்தது.
நல்லூர் நங்கை
ஆண்டுகள் சில உருண்டன. பேகன், நல்லூர் என்னும் ஊருக்கு ஒரு சமயம் சென்றிருந்தான். அவ்வூர் அவனை மிகக் கவர்ந்தது. அதனினும் அவ்வூரில் இருந்த மங்கை நல்லாள் ஒருத்தியின் அழகு அவனைப் பெரிதும் கவர்ந்தது. காண்பவர் உள்ளத்தைக் கொள்ளும் அழகியான அவளிடம் தன் உள்ளத்தைப் பறிகொடுத்துவிட்டான். அவன் அரண்மனைக்கு வந்தபோதும் அவன் உடல்தான் வந்ததே அன்றி. உயிர் நல்லூரில்தான் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. எவ்வளவு முயன்றும் அவனால் நல்லூர் நங்கையை மறக்க முடியவில்லை. வேந்தனான அவன் அடிக்கடி அவ்வூருக்குச் சென்று அவள் வீட்டையே தஞ்சமாக அடைந்தான். நாள் செல்லச் செல்ல அவளைப் பிரிய மாட்டாத அளவுக்கு அன்பன் ஆகிவிட்டான். அவளும் தன் உயிரைப் பேகனிடம் ஒப்படைத்தவளாகவே விளங்கினாள். இரும்பும் காந்தமுமாய் இணைந்துவிட்ட அவர்கள் பிரிந்து வாழ ஒருப் படவில்லை. நல்லூரிலேயே தங்கலாயினான் பேகன். முல்லை வேலி
அரசனே குடிவந்தபின்
குடிசை’ குடிசையாகவே
இருக்குமா? வளமனையாக மாறியது; சோலைகளும், நீராழி