உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416

இளங்குமரனார் தமிழ்வளம்

5

மண்டபங்களும், கலைக் கூடங்களும், நிலா முற்றங்களும் உருவாயின. வளமனைக்கு வேலி அமைத்தான். எப்படி? சுவராலா? கற்களாலா? முட்செடிகளாலா? இல்லவே இல்லை! முல்லைக் கொடிப் பந்தர்களாலேயே வேலி அமைத்தான். காற்றூர்ந்து வரும்பொழுது காத தூரம் மணம் பரப்பும் வண்ணம் கவின்மிக்க முல்லைப் பந்தரையே வேலியாக அமைத்தான் என்றால், மலை போலக் காட்சி வழங்கிய மனைக்குள்ளே அவன் என்னென்ன வேலைப்பாடுகள் செய்தி ருப்பான்! அவன் வீட்டிற்குள் செய்துள்ள வனப்பை எவர் கண்டார்? வேலி வனப்பில் ஆழ்ந்தவர்கள் "முல்லை வேலி நல்லூர்' என்று பெயர் சூட்டினார்கள் என்பது உண்மை.

பிரிவும் பரிவும்

என் கண், என் உயிர் என்று பேகனை எண்ணி உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணகியார்க்குப் பேகனைப்பற்றிய இந்தச் செய்தி எப்படி இருந்திருக்கும்? கண்ணகியார் நெஞ்சம் புண்ணாகி விட்டது! அவரிடம் வந்தவர்களும், போனவர்களும் பேகனது நிலைமையை அன்பினர்போல் எடுத்துரைத்து ஆறாத் துயருக்கு ஆளாக்கிவைத்தனர். பழம் புண்ணிலே பழுக்கக் காய்ச்சிய இரும்பு புகுந்தாற் போல அவர்கள் சொல் இருந் துங்கூட, ‘கணவனாவது கவலையற்று இருக்கட்டுமே' என்று அடக்கி வைத்திருந்தார். என்றாலும், உண்ணுவது குறைந்தது! உயரிய உடை உடுத்தி அழகு கொள்வது நின்றது; புதுநீர் ஆடுதலும், பூச்சூடுதலும் நீங்கின. கனலிடைப்பட்ட புழுவெனத் துடித்து வாழ்ந்தார்; சிலவேளைகளில் லை தாங்கமாட்டாமல் கண்ணிர் சொரிந்தார். பாவம் நல்லூரிலே, முல்லை வேலி மாளிகையிலே இன்பமே பொருளாகத் தஞ்சம் புகுந்திருக்கும் பேகனுக்குக் கண்ணகியார் நினைவு வருமா? அவனுக்கு நினைவு வாராமல் போயினும், உயிர் போவதாக இருந்தாலும் உண்மை போயினும், உயிர் போவதாக இருந்தாலும் உண்மை உரைப்பதற்கு அஞ்சாத உயர்பெருமக்கள் பலராகப் பெருகி இருந்த அந்நாளில் நினைவு படுத்துபவர்கள் இல்லாமலா போய்விட்டார்கள்?

நால்வர் வழி நல்வழி

கவன

பொதினி அரண்மனைக்குப் பேகனைத் தேடிப் போன பெரும் புலவர்கள் நால்வர். அவர்கள் பேகனைக் கண்டார்கள் அல்லர். பேகனை நினைந்து நைந்து உருகிக்கிடந்த கண்ணகி யாரைக் கண்டார்கள். அவலத்தை அறிந்தார்கள். பரிசில்