உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418

இளங்குமரனார் தமிழ்வளம் 5

அல்லேன்; ‘வறுமையால் வாடும் பெருஞ் சுற்றத்திற்கு என்ன செய்வோம்?' என்னும், ஏக்கத்துடனும் இங்கு வந்தேன் அல்லேன்; எமக்கு நன்பொருள் எதுவும் வேண்டா! நீ இப்பொழுதே உன்தேரில் ஏறி, உன் மனைவியின் துயரைத் துடைக்கச் செல்லுவது ஒன்றே எமக்கு வேண்டிய பொருள். இப்பொழுதே புறப்படு; பூட்டப் படுவதாக உன் குதிரைகள்.”

அரிசிலார் அன்புரை

66

ஆமாம் அரசே! உன் பொருள் எதுவும் எமக்கு வேண்டா. உன் மனைவி தழைத்துக் கிளைத்த கூந்தலிலே பூச்சூடுமாறு பாழுதே புறப்படு! உன் குதிரைகளை உடனே தேரில் பூட்டு” என்று வற்புறுத்தினார் அரிசில் கிழார்.

குன்றூரார் குறிப்புரை

66

காடுமலை கடந்து வந்தேன், உன்னைக் கண்டு உரைக்க விரும்பியது ஒன்றே! “புலம்பி அழுது கொண்டு இருக்கும் உன் மனைவி பூச்சூடி மகிழுமாறு புறப்படு' என்னும் ஒன்றே அது” என்று ஏவினார் பெருங்குன்றூர் கிழார்.

திருந்திய வேந்தன்

பெருநலங் கனிந்து பேணிச் சொல்லிய இப்பெரு மக்கள் உரை பேகன் செவிக்கண் செல்லாவா? நெஞ்சத்தில் நில்லாவா? நன்றாகச் சென்றன; நன்றாக நிலைத்தன; பேகன் வாயால் எதுவும் சொன்னான் அல்லன். வாய்ச் சொற்களால் வாய்க்கும் பயன் தான் என்ன? செய்ய வேண்டியது இன்ன தெனச் செம்மை யாகச் சொன்னார்கள் சீரிய புலவர்கள். செயலில் இறங்கினான் திருந்திய வேந்தன் பேகன். வேண்டுவது அது தானே!

குதிரைகள் தேரில் பூட்டப் பெற்றன; பேகன் தேர் ஏறினான்; பொதினி பொலிவுற்றது; கண்ணகியார் கலக்கம் கலைந்தது; களிப்புக் குடிபுகுந்தது; கண்ணகியார்க்கு மட்டுமா களிப்பு? கவிஞர் பெருமக்கள் கொண்ட களிப்புக்குக் கரை யுண்டா? அவர்கள் செய்த - தொண்டுதான் எத்தகையது. அவர்கள் எவ்வளவு பரந்த மனப்பான்மையினர்! அரசனது இல்வாழ்க்கை இடைப் புகுந்து திருந்தி வாழுமாறு ஏவிய பெருந்தன்மைப் புலவர்களை எச் சொற்களால் புகழ்வது?