பண்டைத் தமிழ் மன்றங்கள்
421
கொண்டது தொண்டை நாடு. தொண்டைமான் என்னும் தமிழ் அரச மரபினர் அதனை அதனை ஆண்டு வந்தனர். அவர்களுள் தொண்டைமான் என்னும் பெயரினையுடைய அரசன் ஒருவன் இருந்தான். அவன் படைப் பெருக்கத்தால் பார் புகழ் பெருமை எய்தலாம் என்றும், பக்கத்து நாட்டை எல்லாம் கவர்ந்து காள்ளலாம் என்றும் பற்று வைத்திருந்தான். அப் பற்றுதலால் படைவீரர்களையும், படைக்கலங்களையும் அளவிறந்து பெருக்கினான். கோட்டைச் சுவர்களை உயர்த்தியும், புதுப் பித்துக் கட்டியும் உறுதிப்படுத்தினான். அகழிகளையும் ஆழப் படுத்தினான். அரண்களில் புதுப்புதுப் பொறி வகைகளைப் பொருத்தினான். நாளெல்லாம் படைகளையும் படைக்கலங் களையும் கண்டுகளிப்பதையே தொழிலாகக் கொண்டான். இவையெல்லாம் அவனை அளவிறந்து செருக்கி செருக்கி வெறி கொள்ளுமாறு தூண்டின.
சீரிலாச் செருக்கு
“எம்மை எதிர்க்க எவராலும் இயலாது. 'இப்படை தோற் பின் எப்படை வெல்லும்!' இத்தகைய படைக்கலங்களும், அரண் வலிமையும், திறமிக்க படைகளும், உடையோர் உலகில் எவர்?' என்று எண்ணித் எண்ணி தன்னைத்தானே வியந்து கொண்டான்; தருக்கு விஞ்சியது! ஆகவே தமிழ் நாட்டு வேந்தர்களை வென்று அடிமைப் படுத்துவது தன் வேலை என்றும், அவ்வாறு செய்ய நினைத்தால் அது மிக எளிதில் நிறைவேறும் என்றும் எண்ணினான்.
“வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்”
(குறள், 471)
ஆற்றுவதற்கு எவ்வளவு நுண்ணறிவு வேண்டும்? ஆனால், உணர்ச்சிமிக்க உள்ளம், அறிவுக்கு அவ்வளவாக வேலை தருவது இல்லையே!
குதிரைமலைக் கோமான்
தொண்டை நாட்டின் அடுத்து இருந்தது குதிரைமலை. இம்மலைப்பகுதியைத் தகடூர் என்னும் ஊரினைத் தலைநகராகக் கொண்டு அதியமான் என்னும் புகழ்மிக்க சிற்றரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் மாபெரும் வீரன்! மாற்றாரைப் புறங்காணுதலில் தேர்ந்தவன்; ஆனால், பிறர் மண்ணைக்