உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422

இளங்குமரனார் தமிழ்வளம் 5

கொள்ள வேண்டும் என்னும் கொள்ளை விருப்புடையவன் அல்லன். அவன் கொண்டிருந்த வீரர்கள் ‘மழவர்கள்' என்னும் பெயர் பெற்றனர். இன்றும் ‘மழவர்’ எனின் ‘வீரர்’ என்னும் பொருளே தரும் அளவுக்கு அவர்கள் வீரர்களாக இருந்தனர். மிகமிக அகவையால் மூத்தோராக இருக்கலாம். எனினும் அவர்கள் இளந்துடிப்பு உடையவர்களாகத் திகழ்ந்தனர். ‘மழ’ ‘குழ’ என்னும் சொற்கள் இளமைப் பொருள் உடையன என்பது தொல்காப்பியனார் உரை. இளந்துடிப்புடைய வலிய வீரர்கள்’ ‘மழவர்’ என்பதற்கு இஃதொரு சான்றாகும்.

குடிபடை

க்

அதியமான் படைவீரர்க்கும், மற்றை அரசர்கள் படை வீரர்க்கும் பெரியதொரு வேற்றுமை உண்டு. மற்றவர்கள் வீரர்களைப் போருக்காகவே தேர்ந்தெடுத்துப் பயிற்சி தந்து, அரசின் வருவாயில் இருந்து ஊதியமும் தந்து வந்தனர். படைக் கலக்கொட்டில்கள் பல கட்டி வைத்துக் காத்து வந்தனர். ஆனால், அதியமானுக்கு இவர்கள் தாம் வீரர்கள் என்பது ல்லை. அவன் நாட்டில் இருந்த அனைவரும் படைவீரர்களே. குடிகளே படைகள்! படைகளே குடிகள்! அவனுடைய நாட்டில் இருந்தவர்கள் அனைவரும் 'குடி படைகள்!' இந்நிலையில் விரல் விட்டு எண்ணும் வீரர்களைக் கொண்டுள்ள வேந்தர்கள் வீர நிலைமை என்னாம்? குடிகளின் வீடெல்லாம் படைக்கலக் கொட்டில் என்றால் எதிர்ப்பவர் நிலைமை என்னாம்? எங்கு முற்றுகை இடுவது? எங்குத் தாக்குவது? எவ்வழியைத் தடுப்பது? சதுரங்க ஆட்டம்

இந்த

நிலைமைகளை

யெல்லாம் அறியவல்லவன் அல்லன் தொண்டைமான். அவன் கண்ணோட்டம் மிகமிகச் சுருங்கி விட்டது. பகைவன் வலிமையை எண்ணிப் பார்ப்பதை விடுத்து ‘வெற்றி நமதே'; என்று தப்புக் கணக்குப் போட்டுக் காண்டான். குதிரை மலையைச் சூழ்ந்து தாக்குவதற் குரிய பொழுதையும் எதிர்நோக்கி யிருந்தான். எதிரியின் ஆட்டக் கால்களையும், அவை நிற்கும் நிலைகளையும் எண்ணிப் பாராமல், தன் ஆட்டக் காய்களை மட்டுமே கருதிச் சதுரங்கம் ஆடுபவன் வெற்றி கொள்ள முடியுமா?

ஓர் எண்ணம்

நாட்டுமக்களையெல்லாம் நல்ல வீரர்களாகக் கொண்ட அதியமானுக்குத், தொண்டைமான் தருக்கு எண்ணம் அறிய