5. வள்ளல் பேகன்
அழியாப் புகழ் பெற்ற வள்ளல்கள் நால்வரை முன்னே கண்டோம். அவர்கள். பறம்பு மலைக் கோமான் பாரி; கொல்லி மலைக் கோமான் ஓரி; முள்ளூர் மன்னன் காரி, குதிரைமலைக் கொற்றவன் அதியமான் எழினி என்பார்.
ஈதலும் இசைபட
வாழ்தலுமாக அமைந்த அவ் வள்ளல்கள் வரிசையில் சொல்லப் பட்டார் மேலும் நால்வர் உளர். அவர்கள் வையாவிக் கோப் பெரும் பேகன், ஆய் அண்டிரன், நள்ளி, குமணன் என்பார்.
இவ்வெண்மரையும் வரிசைப்படுத்திக் கூறினார் சங்கப் பெரும் புலவர் பெருஞ்சித்திரனார். முன் ஏழு பேர்களையும் சிறுபாணாற்றுப் படையும் கூறியது.
“ஈர்ந்தண் சிலம்பின் இருள் தூங்கு நளிமுழை அருந்திறல் கடவுள் காக்கும் உயர்சிமைப் பெருங்கல் நாடன் பேகன்”
என்பது புறநானூறு (158).
66
'வானம் வாய்த்த வளமலைக் கவாஅன் கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் பெருங்கல் நாடன் பேகன்’
என்பது சிறுபாணாற்றுப் படை
கொடையாளர் எண்மரிலும் பேகனும், பாரியும் குமணனும் தனிச் சிறப்பினராகப் பழம்புலவர்களால் பாராட்டப் பட்டனர். ஏனெனில் இம்மூவரும் கொடுத்த கொடையின் சிறப்பு அத் தகையதாம்.
மழைமேகம் கண்டுமயில் ஒன்று ஆடியது. அதனைக் கண்ட பேகன் மயில் குளிர் தாங்காமல் ஆடுவதாக எண்ணி னான். இரக்கம் கொண்டான். வாடைக் குளிர்க்குக் காப்பாகப்