உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூற்றுக் கதைகள்

29

போர்த்திருந்த போர்வையை மயிலுக்குப் போர்த்தினான்! தான் நடுங்கினாலும் அது நடுங்கக் கூடாது என்று போர்த்தியதால் மயிலுக்குப் போர்வை போர்த்திய மாப்பெருவள்ளலாகப் பாடு புகழ் பெற்றான்.

பேகனிலும் பெருமை பெற்றவனாகப் புலவர்களுக்குப் பாரி தோன்றினான். அவன் முல்லைக் கொடி பந்தல் இல்லாமல் காற்றில் ஆடுவது கண்டு உருகினான். தான் ஊர்ந்து போன தேரை அதற்குப் பந்தலாக வழங்கிவிட்டு நடந்து போனான். மயில் ஐந்தறிவு உயிரி. முல்லையோ ஓரறிவு உயிரி. ஆதலால் மயிலுக்கு வழங்கிய கொடையிலும், முல்லைக்கு வழங்கிய காடை பெருமை மிக்கதாயிற்று. புலவர்கள் முல்லைக்குத் தேரும், மயிலுக்குப் போர்வையும் வழங்கியவர்கள் என வரிசைப் படுத்தினர். பாரியைப் பற்றி முன்னர் அறிந்தோம். பேகனை இவண் அறிவோம். குமணன் நிறைவில் வருவான்.

பேகன் ஆட்சிபுரிந்த இடம் இப்பொழுது பழனி எனப் படும் பழம்பெரும் மலையும் அதன் பகுதியுமாகும். அதன் பழம் பெயர் ‘பொதினி' என்பது. பொதினி என்பதே மக்கள் வழக்கில் பழனியாகிவிட்டது.

நம் பழைய வரலாறுகள் பலவற்றுக்கும் கட்டுக் கதைகளை டுக் கட்டி வரலாற்றை மறைக்கும் செயலை நெடுங்காலமாக வடமொழி கற்றவர்களும், அவர்கள் வழியைப் பற்றியவர்களும், கோயில் பூசை செய்தவர்களும் செய்து வந்தனர். அதனால் உண்மை பலவகையாலும் மறைக்கப்பட்டது. வரலாறு அழிக்கப் பட்டது. பொருந்தாக் கதைகள் பொதுமக்கள் மனத்தில் படிந்து போனது. அதற்கு ஏற்பக் கதைகளைப் புராணங்களாகப் புலவர்கள் பாடிவிட்டனர்.

பொதினி, ‘பழனி' எனப்பட்டது; அதன்பின் ‘பழநி' எனப்பட்டது. ‘பழநீ’ என இறுதி எழுத்து நீட்டப்பட்டது.

சிவபெருமான் கையில் ஒருபழம் இருந்தது; அது மாம்பழம். அதனை மூத்த பிள்ளையாரும், முருகனும் தத்தமக்குக் கேட்ட னர். பெருமான், உலகத்தை முதலாவதாகச் சுற்றி வருபவனுக்கே பழத்தைத் தருவதாகக் கூறினார். முருகன் மயில் மீதில் ஏறி உலகை வலம் வரப் புறப்பட்டார். பிள்ளையார் ஊர்தி பேரெலி (பெருச்சாளி); மயில் போல் விரைந்து செல்லமுடியாதே. அதனால் பிள்ளையார் ஒரு தந்திரம் செய்தார். அம்மையும் அப்பனுமே உலகம் ஆதலால் அவர்களைச் சுற்றினாலே