பண்டைத் தமிழ் மன்றங்கள்
437
போர்த் துணையால் கிடைக்கும் பொருளை எல்லாம் இல்லை என இரந்து வந்தவர்க்கு எல்லை இன்றி வழங்குதற்கே செல விட்டான். எந்த ஒரு பொருளையும் தனக்கென வைத்துக் கொண்டான் அல்லன். 'முள்ளூர் மலையில் பெய்த மழைத் துளியினும் மிகுதியாகத் தேர்களை வழங்கினான்! போகக் கூடாத நாளில், பொருந்தாத வேளையில், காரியைக் கண்டு, பொருத்தமற்ற சொற்களைச் சொன்னால் கூட இரவலன் வெறுங் கையுடன் திரும்பான்' என்னும் பாராட்டைப் பெற்றவன் காரி! எவர் வாயால்? பெய்யா நாவின் புலவர் பெருமான் கபிலர் வாயால். வள்ளுவர் வாயாலேயே ‘அறவோன்' என்னும் பட்டம் பெற்றுவிட்டால், மற்றவர்கள் சொல்ல என்ன இருக்கிறது? உணர்ச்சி மிக்க உள்ளம்
ம்
வேண்டியவர்களுக் கெல்லாம், வேண்டிய பொழுது எல்லாம் விரும்பிச் சென்று போரிட்ட காரிக்கு வேண்டாதவர் இல்லாமல் போவாரா? காரியின் பகைவர் பலர். அவர்களுள் ஒருவனே பண்ணனைப் பாடிய கிள்ளிவளவன்.
கிள்ளியின் பகைமை காரி இறந்த பின்னரும் நிற்கவில்லை. அவன் மைந்தர் மேலும் பகைமை பாய்ந்தது! ஏதும் அறியா இளைஞர் என்ன செய்வர்? எய்தவன் இருக்க அம்பை நோவதில் பொருளில்லை என்னும்போது, இவ்வெறுப்பில் ஏதேனும் பொருளுண்டோ? உணர்ச்சி வயப்பட்ட உள்ளம் உண்மையை உணரத் தலைப்படுவதில்லை என்பது நாளும் அறிந்த ஒன்று தானே!
காரியின் வழியையே ஒழித்து விடவேண்டும் என்பது கிள்ளி'யின் எண்ணம். ஆகவே காரியின் இளஞ்சிறுவர் இரு வரையும் காண்டு வரச்செய்தான். எங்கு? காலைக் களத்திற்கு! ஒளிவு மறைவின்றிக் கொல்ல வேண்டும் ( ஊரறியக் கொல்ல வேண்டும்) என்பதே அவன் எண்ணம்
ஐயோ அழாதீர்
ளைஞர்கள் நிற்கின்றனர்; சுற்றிலும் மக்கள் கூட்டம் நிற்கின்றது! 'மன்னனுக்குப் பகைவன் மக்களுக்கும் பகைவரே’ என்பதுதான் அன்று மக்களிடம் ஊறிக்கிடந்த எண்ணம். குன்றம் நடந்து வருவது போலக் கொடிய யானை ஒன்று காலைக் களத்திற்கு வருகின்றது. கூற்றுவன் போன்ற பாகன் குத்துத்தடி கொண்டு விரைந்து செலுத்துகின்றான். அதன் மணி ஒலி கேட்போரை நடுங்க வைக்கிறது. பகைவர் களிறுகளுக்குக்